சமூக தளங்களில் முதல் நிலையில் இருக்கும் இணையதளம் பேஸ்புக். தற்போது வரை 800 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ளது பேஸ்புக். இந்தியர்களிடையே பேஸ்புக் தளம் அபரிமிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. உலகளவில் பேஸ்புக் உபயோகத்தில் இந்தியா 2 வது இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் இருந்த இந்தோனேசியாவை வீழ்த்தி இந்த இடத்தை அடைந்துள்ளது இந்தியா.
