உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Saturday, January 26, 2013

>>>நுகர்வோர்க்கான ஒரு விழிப்புணர்வு பார்வை...

அன்றாட வாழ்க்கையின் அவசரத்தில் நுகர்வோராய் இருக்கும் நாம் வியாபாரிகளை பல்வேறு காரணங்களுக்காக குற்றம் சொல்வோம் ஆனால் நுகர்வோரின் கடமைகள் என்ன? என்று நமக்குத் தெரியுமா? இது பற்றிய ஒரு விழிப்புணர்வு பார்வை இதோ…

முக்கியப் பேருந்து நிலையங்கள் போன்ற, அவசரகதியாக மக்கள் கூடும் இடங்களில் அமைந்திருக்கும் கடைகளில் சென்று பொருட்களை வாங்கும் போது பார்த்தால், பெரும்பாலும் இரண்டு மூன்று ரூபாய் அதிகம் விலை வைத்தே விற்பனை செய்கிறார்கள். என்னது இது? எம்.ஆர்.பி இவ்வளவு தானே, ஏன் அதிகமான விலைக்கு இந்த பொருட்களை விற்கிறீர்கள் என்று கேட்டு விட முடியாது. அப்படிக் கேட்பின் சுற்றி நிற்பவர்களும், கடைக்காரரும் நம்மைப் பார்க்கும் பார்வை இருக்கிறதே… கொடுமை. அத்தனை ஏளனம் இருக்கும். நாம் வாங்குகின்ற பொருளுக்கு காசு குடுக்கின்ற நாம் எஜமானர்கள் கிடையாது. இது தான் நடப்பில் உள்ள நிதர்சனமான உண்மை. சரி, அதட்டித்தான் கேட்க வேண்டாம், “என்ன சார் இது? இப்டிப் பண்றீங்களே” என நியாயமான முறையில் கேட்டாலும் கூட… அதான் எல்லாரும் வாங்கிட்டுப் போறாங்களே.. உனக்கு மட்டும் என்னய்யான்னு துரத்தாத குறையாக, ஒரு அலட்சியப் பதில் வரும். ஏன் இந்த நிலை? எப்படி நாம் இந்த சூழலுக்குத் தள்ளப் பட்டோம்?

Friday, January 25, 2013

விஸ்வரூபம் படத்தின் விமர்ச்சனம் (முகநூலில்) நன்றி-ஃபேஸ்புக் பரண்

ய1படம் பார்த்துவிட்டேன் நான். நான் எழுதுவது எல்லோருக்கும் உடன் பாடு இல்லாமல் இருக்கலாம் ஆனால் எனது கருத்தை நான்

பதியாமல் இருக்க முடியாது .சிலர் அதிகப்படியாக என்னை த் திட்டலாம் உங்களுக்கு நான் சொல்லும் பதில் படத்தைப் பார்த்துவிட்டு வந்து என் னை திட்டுங்கள் .
துப்பாக்கி படத்தைப் பார்த்து விட்டு வந்து மனம் கொதித்து பதிவு போட்டவன் நான். ஆனா ல் இந்தப் படத்தைப் பார்க்கும் போது எனக்கு எந்த இடத்தி லும் அது போன்ற உணர்வு வரவில்லை. அதிக படியா ஒரு ஆக்சன் படம் பார்த்த உணர்வு மட்டுமே வந்தது .ஏன் எனில் இது போ ன்ற ஆப்கான் தீவிர வாதம் பற்றிய கதை நிறைய ஆங்கிலத்தில் பார்த் தாச்சு. இன்னும் வந்துகொண் டே இருக்கு ஒவ்வொருவர் பார்வை யில்.
கதை அமெரிக்காவில் ஆரம்பிக்கிறது. நடனம் சொல்லி கொடுப் பவராக இருக்கிறார் கமல். அவருடைய மனைவியை வேலை பார்க் கும் முதலாளி விரும்புகிறார். மனைவிக்கும் அவர் மேல் ஆசையி ருக்கிறது காரணம் கமல் வயதானவர் பழக்க வழக்கத்தில் பெண் சாயல் கொண்டவர்.

Wednesday, January 23, 2013

செல்போன் கட்டணம் உயர்வு: நிமிடத்திற்கு ரூ.2 உயர்வு

புதுடில்லி: ஏர்டெல், வோடபோன் செல்போன் சேவை நிறுவனங்கள் கட்டணத்தை இரு மடங்கு அதிகரித்துள்ளன. ஒரு நிமிடத்துக்கு ஒரு ரூபாய் என்பது 2 ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. ஐடியா நிறுவனம், ஒரு நொடிக்கு 1.2 பைசா என்று இருந்ததை 2 பைசாவாக அதிகரித்து உள்ளது. செல்போன் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இதுவரை கட்டணத்தை உயர்த்தாமலே இருந்தன. இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அரசு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விட்ட பிறகு ரூ.23,000 கோடி கட்டணம் செலுத்தும்படி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது. மேலும் அதிகரித்து வரும் செலவால் செல்போன் நிறுவனங்களின் நிகர லாபம் தொடர்ந்து குறைந்து வருவதும் கட்டண உயர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.செல்போன் சேவையில் இந்தியாவில் முதல் இடத்தில் இருக்கும் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் நிகர லாபகம் கடந்த மூன்றாண்டுகளாக வீழ்ச்சிக் கண்டுள்ளது. மார்ச் 1ம் தேதி முதல் இந்தியா முழுக்க ரோமிங் கட்டணத்தை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அப்போது ஏற்படும் வருமான இழப்பை ஈடுகட்ட, இப்போதே செல்போன் நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தி இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Monday, January 21, 2013

மின் நிலைய விவகாரத்தில் தமிழகத்திற்கு ஓரவஞ்சனை ! (தினமலர் செய்தி)

மின் நிலைய விவகாரத்தில் தமிழகத்திற்கு ஓரவஞ்சனை !
மின் பற்றாக்குறையால், தமிழகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, நிலை குலைந்துள்ள நிலையில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனமான, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், உத்தர பிரதேச மாநில மின் தட்டுப்பாட்டை தீர்க்க முற்பட்டுள்ளது. ஒட்டு மொத்த தமிழக மக்களுக்கும், அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையிலான, மத்திய அரசின் இந்த நடவடிக்கை, தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மின்வெட்டு :

Pirabakaran

Related Posts Plugin for WordPress, Blogger...