உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..
Showing posts with label Tiruppur. Show all posts
Showing posts with label Tiruppur. Show all posts

Sunday, June 03, 2012

ICDS Anganvadi Workers Recruitment News - at Thiruppur

Thiruppur Govt Technical Training Institute Admission

SSA Differently Abled Children Free Medical Camp News - at Thiruppur

Sunday, May 20, 2012

நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்காததால் அவலம்!

:திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, காமராஜ் ரோட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக, அப்பகுதியில் இருந்த 33 கடைகள் இடிக்கப்பட்டன.ஆனால், ஒன்றரை ஆண்டுகளாகியும், ரோடு விஸ்தரிக்கப் படாமல் உள்ளது. தள்ளுவண்டி கடைகள் அதிகரிக்கத் துவங்கி விட்டன. மினி பஸ்கள் நிறுத்தப்படுவதால், போக்கு வரத்து நெரில் அதிகரித்த வண்ணம் உள்ளது.திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில், காமராஜர் ரோட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான 33 கடைகள் இருந்தன. ஜவுளிக்கடைகள் மற்றும் செருப்பு கடைகள் செயல்பட்டு வந்தன. அவற்றின் மூலமாக, மாநகராட்சிக்கு ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்து வந்தது. காமராஜ் ரோட்டில் ஏற்பட்டு வந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதற்காக, அப்பகுதியில் இருந்த கடைகளை இடிக்க, மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. 

Saturday, May 19, 2012

பல்லடத்தில் அளவுக்கு அதிகமாக மது குடித்த மின் வாரிய ஊழியர் சாவு

பல்லடத்தில் அளவுக்கு அதிகமாக மது குடித்த மின் வாரிய ஊழியர் சாவு
பல்லடம், மே. 14- 
 
பல்லடத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 42). திருப்பூர் மின் வாரியத்தில் கணக்கீட்டாளராக பணியாற்றி வந்தார். குடிப்பழக்கம் உள்ள இவர் சரியாக வேலைக்கு செல்வதில்லை.
 
நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற இவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தங்கை கவிதா பல்வேறு இடங்களில் குணசேகரனை தேடினர். பலன் இல்லை.
 
இந்த நிலையில் பல்லடம் பஸ் நிலையம் எதிரேயுள்ள மீன் வளர்ச்சி கழக விற்பனை அங்காடி அருகே மது குடித்து ஒருவர் இறந்து கிடப்பதாக பல்லடம் போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தீவிரமாக விசாரித்தனர்.
 
அப்போது இறந்து கிடந்தவர் குணசேகரன் என்பதும், அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் இறந்ததும் தெரியவந்தது.  

Wednesday, April 25, 2012

Tiruppur News மக்களை மிரட்டும் குழி


TIRUPPUR NEWS நான் வசிக்கும் பகுதிக்கும் பகுதியில் விபத்து


Thursday, April 12, 2012

பழைய பஸ் ஸ்டாண்ட் வடக்கு நுழைவாயில் நாளை திறப்பு

திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் வடக்கு நுழைவாயில் வழியாக, தமிழ் புத்தாண்டு முதல் பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில் நடக்கும் பராமரிப்பு பணியை, மேயர் விசாலாட்சி, கமிஷனர் ஜெயலட்சுமி, துணைமேயர் குணசேகரன் உள்ளிட்டோர் நேற்று ஆய்வு செய்தனர்.மேயர் கூறியதாவது:பழைய பஸ் ஸ்டாண்டில் தரைத்தளம் புதுப்பிக்கும் பணி, 3.60 கோடி ரூபாய் செலவில் நடந்து வருகிறது. வடக்கு பகுதியில் பணிகள் நிறைவடைந்துள்ளதால், வரும் தமிழ் புத்தாண்டு முதல் அவ்வழியாக பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வடக்கு பகுதி கழிப்பிடம் அருகே அமைக்கப்பட்டுள்ள புல் தரையை விரைவில் சீரமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பஸ் ஸ்டாண்ட் அருகில் கட்டப்பட்டுள்ள, வார்டு அலுவலக கட்டுமான பணியையும் விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன், உதவி செயற்பொறியாளர் கண்ணன், இளம்பொறியாளர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் உடனிருந்தன

Friday, March 30, 2012

திருப்பூர் சத்துணவு மையங்களும் மாநகராட்சி வசமாகும்!

திருப்பூர் : ""மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சத்துணவு கூடங்களை, மாநகராட்சி வசம் ஒப்
படைக்க திட்டமிடப்பட்டுள்ளது,'' என திருப்பூர் ஒன்றிய ஆணையாளர் தண்டபாணி தெரிவித்தார்.
திருப்பூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம், தலைவர் சாமிநாதன் தலைமையில் நேற்று நடந்தது. 
ஒன்றிய ஆணையாளர் தண்டபாணி, பி.டி.ஓ., (ஊராட்சி) பூங்கோதை முன்னிலை வகித்தனர்.மங்கலம் புக்குளிபாளையத்தில் ரேஷன் கடை கட்ட, கோவை எம்.பி., நடராஜன் தொகுதி வளர்ச்சி நிதியில் 4.5 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளார். இதற்கு கூடுதலாக ஏற்படும் செலவு 1.7 லட்சத்தை பொது நிதியில் மேற்கொள்தல்; மேற்குபதி ஊராட்சி கொன்னக்காடு ஆதிதிராவிடர் காலனி யில் 6.2 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்டுதல்.கணக்கம்பாளையம் வாஷிங்டன் நகரில் 5.5 லட்சம் மதிப்பில் சாக்கடை கால்வாய் அமைத்தல்; தொர
வலூரில் சமுதாயக்கூடம் அமைத்தல்; ஊராட்சி ஒன்றிய வணிக வளா கத்தின் மேற்பகுதியில் சமுதாயக்
கூடம் அமைத்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.தொடர்ந்து நடந்த விவாதம்:
சாமிநாதன் (தலைவர்): குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் வகையில் ஒன்றிய பகுதிகளில் 60 ஆழ் குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டுள் ளன. அவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், ஊராட்சிகள் சார்பில் மின் மோட்டார் பொருத்தி செயல்படுத்தவும், ஊராட்சி தலைவர்களுடன் இணைந்து ஒன்றிய கவுன்சிலர்கள் செயல்பட வேண்டும்.

முத்துசாமி (முத்தணம்பாளையம்): ஊராட்சி தலைவர்களுடன் இணைந்து செயல்பட எங்களுக்கு விருப்பம். ஆனால், அவர்கள் யாரும் எங்களை எதற்கும் அழைப்பதில்லை; மரியாதை இல்லாமல் எப்படிச் செல்வது.
தலைவர்: பொது வாழ்க்கை, பொது சேவைக்கு வந்து விட்டோம். நம்மை அழைக்கவில்லை என்று வருந்தக்
கூடாது. நாமே சென்று மக்களுக்கான பணிகளைச் செய்யலாம். குடிநீர் சப்ளை இல்லாமல், மின் கட்டணம் மட்டும் குறையாமல் உள்ளதாக புகார்கள் வரு கின்றன. இதுகுறித்து குடிநீர் வாரியம் மற்றும் மின்வாரிய அலுவலர்களுடன் ஊராட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். கடந்த முறை அழைக்கப்பட்ட கூட்டத்துக்கு ஊராட்சி தலைவர்கள் யாரும் வரவில்லை என்ற புகாரும் உள்ளது. ஊராட்சி தலைவர்கள் இதுபோன்ற கூட்டங்களில் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

சிராஜூதீன் (துணை தலைவர்): திருமண உதவி தொகை வழங்கும் பணியில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியையும் ஒன்றிய அலுவலர்கள் பார்க்க வேண்டியுள்ளது. இதனால், தேவையற்ற கால தாமதம் ஏற்படு
கிறது. மாநகராட்சிக்கு உட்பட்ட விண்ணப்பங்களை மாநகராட்சியே பார்க்க வேண்டும். குழப்பங்களை தவிர்க்க பெறப்படும் விண்ணப்பங்களுக்கு ஒப்புகை வழங்க வேண்டும். ஏராளமான மனுக்கள் நிலுவையில் உள்ளன.

தண்டபாணி (ஆணையாளர்): 
மாநகராட்சி பகுதி சார்ந்த மனுக்களை மாநகராட்சி நிர்வாகமே கவனிக்க வேண்டும் என்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மனுக்களுக்கு ஒப்புகை வழங்குவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த வாரம் நூற்றுக்கணக்கான பயனாளி
களுக்கு உதவி வழங்கப்பட உள்ளது. மாநகராட்சியில் இணைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள்போல், சத்துணவு மையங்களும் மாநகராட்சிக்கு ஒப்படைக்கப்படும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, விவாதம் நடந்தது.

திருப்பூர் : இன்றைய நிகழ்ச்சி

குண்டம் மற்றும் தேர்த்திருவிழா: கொண்டத்துக்காளியம்மன் கோவில், பெருமாநல்லூர். தேர் முகூர்த்தக்கால் நடுதல் - மாலை 5.30 மணி; பட்டத்தரசியம்மன் அழைப்பு - இரவு 10.00 மணி.
குபேர மகா யாகம்: ஸ்ரீசவுடாம்பிகை அம்மன் திருமண மண்டபம், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீரிஷி யோகாலயா ஞானகவுரி வித்யா யோகபீடம்.
விக்னேஷ்வர பூஜை, நவசக்தி அழைத்தல் - அதிகாலை 3.00 மணி; கலச பூஜை - 4.00 மணி; பூர்ணாஹூதி - 5.15 மணி; ஹயக்ரீவ மூலமந்திரம் - பிற்பகல் 3.45 மணி; தன்வந்த்ரி மூல மந்திரம் - இரவு 9.00 மணி.
திருத்தொண்டர் புராண தொடர் சொற்பொழிவு: ஏ.டி.டி., பையிங் அலுவலகம், புது பஸ் ஸ்டாண்ட் எதிரில், திருப்பூர். சொற்பொழிவாளர் - தியாகராஜன். மாலை 5.00 முதல் இரவு 7.00 மணி வரை.
பொங்கல் விழா: சித்தி விநாயகர், மாகாளியம்மன் கோவில், கரட்டாங்காடு, திருப்பூர். அன்னதானம் - மதியம் 12.00 மணி.
மண்டல பூஜை: ஸ்ரீவீரமாத்தி அம்மன் கோவில், நல்லூர், திருப்பூர். காலை 6.00 மணி.
* காமாட்சி அம்மன் கோவில், திருமுருகன்பூண்டி, அவிநாசி. காலை 6.00 மணி.
* மயிலம்மன் கோவில், லட்சுமி நகர், திருப்பூர். காலை 6.30 மணி.
* கன்னிமூல கணபதி, கரியகாளியம்மன், மகா காளேஸ்வரர் கோவில், ஆலத்தூர். மாலை 6.00 மணி.
* ஓம்சக்தி கோவில், பெருந்தொழுவு, திருப்பூர். காலை 5.30 மணி.
பொது
விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்: ஆர்.டி.ஓ., அலுவலகம், குமரன் ரோடு, திருப்பூர். காலை 11.00 மணி.
பட்ஜெட் கூட்டம்: நகராட்சி அரங்கு, பல்லடம். காலை 11.00 மணி.
கம்பி மற்றும் கம்பியில்லா வலை பின்னல் குறித்த கருத்தரங்கு: ஏஞ்சல் பொறியியல் கல்லூரி, தாராபுரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை. காலை 10.00 மணி; "நைஸ் மேஜிக்' மாநாடு நிறைவு விழா - பிற்பகல் 3.00 மணி.
இலவச மருத்துவ காப்பீடு திட்டம் குறித்து ஆலோசனை முகாம்: ரேவதி மெடிக்கல் சென்டர், குமார்நகர், திருப்பூர். காலை 10.00 மணி முதல்.

திருப்பூர், அரசு அலுவலர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்


திருப்பூர்

 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத் துறை அலுவலர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை (மார்ச்-31) நடைபெற உள்ளது. இதில், பங்கேற்க திருப்பூர் மாவட்ட அரசுத் துறை அலுவலர்கள், அமைச்சுப் பணியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் எம்.மதிவாணன் விடுத்துள்ள செய்தி:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (திருப்பூர் பிரிவு) சார்பில் மாவட்ட அளவில் அரசு பணியாளர்களுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை (மார்ச் 31) நடத்தப்பட உள்ளது. திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் காலை 8 மணிக்கு நடைபெற உள்ள இப்போட்டிகள் ஆண்கள், பெண்களுக்கு தனித் தனியாக நடத்தப்பட உள்ளன.அதன்படி, 30 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு 100மீ, 3000மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளும், 40 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு 100மீ, 1500மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகளும், 50 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு 50மீ, 3000மீ ஓட்டம், நடை பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகளும், 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 200மீ நடை பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகளும் நடத்தப்பட உள்ளது.அதேபோல, 30 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு 100மீ, 800மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளும், 40 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு 100மீ, 3000மீ நடை பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகளும், 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு 50மீ, 1500மீ நடை பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகளும், 50 வயதுக்கு மேற்பட்ட 200மீ நடை பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகளும் நடத்தப்பட உள்ளது.
இதில் அனைத்து அரசுத் துறை அலுவலர்கள், அமைச்சுப் பணியாளர்கள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலரை 0421 -2244899 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாம்.

"பேஸ்புக் ஏற்படுத்திய அவலம் – உண்மைச்சம்பவம்

Thursday, March 29, 2012

உடுமலை வாரம் தோறும் நுகர்வோர் குறைதீர் கூட்டம்: மின்வாரியம் தகவல்

உடுமலை மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட கோட்ட அலுவலகங்களில் வாரம் தோறும் புதன்கிழமைகளில் நுகர்வோர் குறை தீர் கூட்டம் நடக்கிறது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உடுமலை மின் பகிர்மான வட்டத்தில், தாராபுரம், பொள்ளாச்சி, அங்கலக்குறிச்சி, உடுமலை ஆகிய கோட்டங்கள் உள்ளன. கோட்ட அலுவலகங்களில் நுகர்வோர் குறை தீர் கூட்டம் முறையாக நடத்தப்படுவதில்லை என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது.
இது குறித்து உடுமலை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: 
உடுமலை மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட கோட்ட அலுவலகங்களில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் நுகர்வோர் குறை தீர் கூட்டம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடத்தப்படுகிறது.
இது குறித்த தகவல்கள் நுகர்வோர்கள் அறிந்து கொள்ளும் வகையில், சம்பந்தப்பட்ட கோட்ட அலுவலகங்களின் தகவல் பலகையில் அறிவிப்பு செய்யப்படுகிறது. இக்கூட்டங்களில் நுகர்வோர் அளிக்கும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மாவட்ட கலெக்டரிடமிருந்து பெறப்படும் பொதுமக்கள் குறை தீர் கூட்ட மனுக்கள் மற்றும் விவசாய குறை தீர் கூட்டங்களில் பெறப்படும் மனுக்களுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எனவே நுகர்வோர் சம்பந்தப்பட்ட கோட்ட அலுவலகத்தில் நடக்கும் குறைதீர் கூட்டங்களை பயன்படுத்தி கொள்ளலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடுமலை கோட்டத்திற்குட்பட்ட குறை தீர் கூட்டம் நேற்று கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், சீரான மும்முனை மின்சாரம், பழுது சரிபார்ப்பதில் காலதாமதம் உட்பட பல்வேறு புகார் மனுக்களை விவசாயிகள் அளித்தனர்.
முகாமில், மேற்பார்வை பொறியாளர் மனோகரன் மற்றும் அதிகாரிகள் புகார் மனுக்களை பெற்றனர்.

அடுத்தடுத்த நிறுத்தங்களில் அரசு பஸ்களில் திடீர் ஆய்வு

:திருப்பூரில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து நிறுத்தங்களிலும் அரசு பஸ்கள் நிற்கிறதா; சரியான நேரத்துக்கு இயக்கப்படுகிறதா என அரசு போக்கு வரத்து கழக அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
திருப்பூரில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில், 252 டவுன் பஸ்கள், 302 மப்சல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அவை தவிர, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திருப்பூருக்கு பஸ்கள் இயக்கப் படுகின்றன. அரசு பஸ்களின் வருவாயை அதிகரிக்க வேண்டிய நிலையில், தனியார் பஸ்களில் இருக்கும் கூட்டம் அரசு பஸ்களில் இருப்பதில்லை. பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்ளாமல் இருப்பது; பஸ்களை உரிய நிறுத்தங்களில் நிறுத்தாமல் இருப்பது; சில அரசு பஸ் ஊழியர்கள் தனியார் பஸ்களுக்கு சாதகமாக சரியான நேரத்துக்கு இயக்காதது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்து வந்தன.
இந்நிலையில், அரசு பஸ்கள் சரியான நேரத்துக்கு இயக்கப்படுகிறதா; அனைத்து நிறுத்தங்களிலும் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல் கின்றனவா என ஆய்வு செய்ய போக்குவரத்து கழக உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். போக்குவரத்து கழக கிளை மேலாளர்கள், அலுவலர்கள், செக்கிங் இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனி குழு அமைக்கப்பட்டது. திருப்பூர் வரும் அனைத்து வழித்தடங்களிலும், அனைத்து நிறுத்தங்கள் என 24 இடங்களில் இக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். ஒரு குழுவுக்கு மூன்று பேர் என மொத்தம் 72 பேர் இப்பணியில் ஈடுபட்டனர்.
ஒவ்வொரு நிறுத்தத்துக்கும் பஸ்கள் வரும் நேரம்; போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் ரோட்டோரங்களில் பஸ்கள் நிறுத்தப்படுகிறதா; பயணிகளை பொறுமையாக ஏற்றி, இறக்கி விடுகி றதா; அடுத்தடுத்து வரும் பஸ்கள் குறிப்பிட்ட நேர இடைவெளியில் வருகிறதா என ஆய்வு செய்தனர்.
கண்டக்டரும், டிரைவரும் பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. நேற்று காலை 7.30 முதல் 11.30 மணி வரை, பிற்பகல் 3.00 முதல் 8.00 மணி வரை, ஆய்வு நடந்தது.
போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், "அரசு பஸ்களில் வரும் பயணிகளுக்கு சரியான சேவை சென்றடைய வேண்டும் என்பதற்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாதத்துக்கு ஒருமுறை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளோம்,' என்றனர்.

திருப்பூர் பெரிய கடை வீதி ஒரு வழிப்பாதையா மாற்றப்படுகிறது

திருப்பூர் :"வரும் ஏப்., 1 முதல், திருப்பூர் பெரிய கடை வீதி ஒரு வழிப்பாதையா மாற்றப்படுகிறது,' என, தெற்கு போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.
திருப்பூரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பெரிய கடை வீதி, வணிக நிறுவனங்கள், அரிசி கடைகள், கோவில், பள்ளிவாசல், பள்ளிகள் அதிகளவு உள்ள பகுதியாக உள்ளதால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த ரோடாக உள்ளது. இதனால், வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், பெரிய கடை வீதி மற்றும் சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பெரிய கடை வீதி ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. இந்நடைமுறை ஏப்.,1 முதல் அமலுக்கு வருகிறது.
அதன் அடிப்படையில், காங்கயம் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் பெருமாள் கோவில் வீதி வழியாக குமரன் ரோட்டுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது. காங்கயம் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் நேராக சென்று, தாராபுரம் ரோடு வழியாக வர வேண்டும்.
வளம் ஆற்றுப்பாலத்தில் இருந்து நேராக காங்கயம் ரோடு செல்லக்கூடாது; குமரன் ரோட்டில் இருந்து அரிசி கடை வீதி வழிய õக காங்கயம் ரோடு செல்லக்கூடாது. ஈஸ்வரன் கோவில் வீதியில் இருந்து கே.எஸ்.சி., பள்ளி வழியாக தாராபுரம் ரோடு செல்லக்கூடாது. இதன் அடிப்படையில், அரிசி கடை வீதி, பெரியகடை வீதி, டூம்லைட் மைதானம் வீதி, கே.எஸ்.சி., பள்ளி வீதி ஆகியவை ஒரு வழிப்பாதையாக மாற்றியமைக்கப்படுகிறது.
போக்குவரத்து போலீசார் கூறுகையில், "ஒரு வழிப்பாதை திட்டம் ஏப்., 1 முதல் அமல்படுத்தப்படும். இதுகுறித்து அனைத்து ரோடுகளிலும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்படும். மீறினால் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக் கப்படும்,' என்றனர்.

Monday, March 26, 2012

திருப்பூர் :குழாய் உடைப்பு; பல லட்சம் லிட்டர் குடிநீர் வீண்

திருப்பூர் மாநகராட்சி 25வது வார்டில் பாதாள சாக்கடை பணியின்போது, பிரதான குழாய் மற்றும் வீட்டு இணைப்பு குழாய்கள் உடைக்கப்பட்டதால் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணானது.
திருப்பூர் மாநகராட்சி 25வது வார்டில், குடிசை பகுதி மேம்பாட்டு திட்டத்தில், மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. ராமூர்த்தி நகர் பகுதியில் உள்ள 1,500க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு, அவிநாசி ரோட்டிலுள்ள 18 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. எட்டு நாட்களுக்கு ஒரு முறை சப்பை தண்ணீரும், மாதத்துக்கு ஒருமுறை மேட்டுப்பாளையம் குடிநீரும் வினியோகிக்கப்படுகிறது.

ராமமூர்த்தி நகரின் கிழமேல் வீதி மற்றும் குமார் நகர் கிழக்கு பகுதியில் இருந்து வரும் எட்டு இன்ச் குடிநீர் குழாய் மற்றும் ஜெ.ஜெ., நகர் வழியாக வரும் ஆறு இன்ச் குடிநீர் குழாய், கிளப் ரோடு வழியாக வரும் ஆறு இன்ச் குடிநீர் குழாய் ஆகியவை பல இடங்களில் உடைக்கப்பட்டுள்ளதோடு, 60க்கும் மேற்பட்ட தனியார் வீட்டு இணைப்பு குடிநீர் குழாய்களும் உடைக்கப்பட்டுள்ளன.
இப்பணி மேற்கொண்டவர்களின் கவனக்குறைவு காரணமாக உடைந்ததோடு, இதுகுறித்தும் வெளியிலும் சொல்லவில்லை.

நேற்று, இப்பகுதிக்கு மேட்டுப்பாளையம் குடிநீர் திறந்த விடப்பட்டபோது உடைப்பு ஏற்பட்டிருந்தது வெளியே தெரிந்தது.
குடிநீர் குழாய்களில் பல இடங்களில் ஏற்பட்ட உடைப்பு வழியாக குடிநீர் பீறிட்டது. அக்குடிநீரால், 10க்கும் மேற் பட்ட பாதாள சாக்கடை "மேனுவல்'கள் நிரம்பின. பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பல அடி ஆழ குழிகளும் குடிநீரால் நிரம்பின. கவுன்சிலர் தரப்பில் மாநகராட்சிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மாநகராட்சி தண்ணீர் திறப்பாளரை தவிர வேறு யாரும் வரவில்லை. பல மணி நேர போராட்டத்துக்குபின், அப்பகுதி பொதுமக்களே பிரதான குடிநீர் குழாய்களை அடைத்தனர்.

கவுன்சிலர் உமா மகேஸ்வரி கூறுகையில், ""கடந்த வாரம் பாதாள சாக்கடை பணியின்போது, ஒரு பிரதான குழாய் உடைக்கப்பட்டது. இந்த வாரம் இரண்டு பிரதான குழாய் உடைக்கப்பட்டுள்ளது. குழாய் உடைத்தது குறித்து முன்னதாகவே தெரிவித்திருந்தால், சரி செய்திருக்கலாம். அவர்கள் தவறை மறைத்ததால், தற்போது குடிநீர் வீணாகி, பொதுமக்களுக்கும் கோடை காலத்தில் குடிநீர் பிரச் னையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் யாரும் வரவில்லை,'' என்றார்.

ஜெனரேட்டர் இயக்க மானிய விலையில் டீசல்

திருப்பூர் :ஜெனரேட்டர் மானியத்தை உயர்த்தியுள்ளதை வரவேற்கும் திருப்பூர் பனியன் தொழில்துறையினர், 
மானிய விலையில் டீசல் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர் மின்வெட்டு காரணமாக, திருப்பூர் பனியன் தொழில் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. வார மின்விடுமுறை
 நடைமுறைக்கு வந்த பிறகும், மின்வெட்டு பிரச்னை சிறிதும் குறை யாதது தொழில்துறையினரை அதிருப்தி 
அடையச் செய்துள்ளது. சாதாரண நாட்களில், வாரத்துக்கு 72 மணி நேரம் உற்பத்தி நடந்தது. வார மின்விடுமுறை,
 தினமும் 10 மணி நேரத்துக்கும் அதிகமாக ஏற்படும் மின்வெட்டால் 50 சதவீத உற்பத்தி கூட நடப்பதில்லை.
மின்வெட்டு பிரச்னை தற்போதைக்கு குறையாது என்ற நிலை உருவாகியுள்ளதால், தமிழக அரசு
 ஜெனரேட்டர்களுக்கான மானியத்தை உயர்த்தி வழங்கியுள்ளது. அதன்படி, 320 கே.வி.ஏ., வரையிலான ஜெனரேட்டர்
 வாங்க, ஐந்து லட்சம் ரூபாய் வரை மானியம் பெற வாய்ப்புள்ளது. மாவட்ட தொழில் மையங்களில் பதிவு செய்துள்
 தொழில் நிறுவனங்கள், ஜெனரேட்டர் மானியத்துக்கு விண்ணப்பித்து பெறலாம்.
பெரும்பாலான பனியன் கம்பெனிகளில் ஜெனரேட்டர் இருந்தாலும், டீசல் விலை உயர்வாக இருப்பதால்
 பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஒரு மணி நேரத்துக்கு 15 முதல் 20 லிட்டர் டீசல் தேவைப்படுவதால், 
மின்வெட்டு பிரச்னை தீரும் வரை, டீசலுக்கு மானியம் வழங்க வேண்டுமென தொழில்துறையினர் வலியுறுத்தி
 உள்ளனர். 

திடீர் அபராதம் விதிப்பதை மின்சார வாரியம் நிறுத்த வலியுறுத்தல்

 பனியன் உற்பத்திக்காக வழங்கப்பட்ட மின் இணைப்பை அலுவலகப் பயன்பாட்டுக்காக உபயோகிப்பதாகக்கூறி மின்சார வாரிய அதிகாரிகள் அபராதம் விதிப்பதை நிறுத்த வேண்டும், என திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழு வலியுறுத்தியுள்ளது.


÷திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழுவின் உயர்மட்டக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை திருப்பூரில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு குழுத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பழனிச்சாமி, செயலாளர் ராமசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்.அண்ணாதுரை, டி.ஆர்.விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
÷மின் பற்றாக்குறை காரணமாக திருப்பூரில் வெள்ளிக்கிழமை மின்விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மின்விடுமுறை, தொழில்துறையினரை பெரிதும் பாதித்துள்ள நிலையில், மின்விடுமுறை தவிர மற்ற நாட்களிலும், நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது.
÷இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில், பனியன் உற்பத்திக்காக வழங்கப்பட்ட மின் இணைப்பை அலுவலகப் பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்துவதாகக் கூறி, பனியன் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து மின்சார வாரிய அதிகாரிகள் லட்சக்கணக்கான ரூபாய் அபராதமாக வசூலித்துள்ளனர்.
திருப்பூர் பனியன் தொழிலுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க முடியாத மின்சார வாரியம்,எந்தவித முன் அறிவிப்புமின்றி இதுபோல் திடீர் அபராதம் வசூலிப்பதை,திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழு கண்டிக்கிறது.
இதுபோன்ற புதிய விதிமுறை தொழில் துறையினருக்கு முறையாகத் தெரிவிக்கப்படுவதோடு, வசூலிக்கப்பட்ட அபராதத் தொகையை மின்வெட்டால் பாதிக்கப்படும் தொழிற்சாலைகளுக்கே திருப்பி வழங்க வேண்டும்.
ஒன்றுக்கு மேற்பட்ட மாடுகளை வைத்திருந்தால், இலவச மின்சாரத்தைப் பயன்படுத்தி வணிகம் செய்வதாகக் கூறி இதற்கும் இலவச மின் இணைப்பு பெற்றுள்ள விவசாயிகளிடம் அபராதத் தொகை மின்சார வாரிய அதிகாரிகளால் வசூலிக்கப்படுகிறது.
எனவே,மாடு வளர்க்கும் சிறு விவசாயிகளையும் இப் பிரச்னையில் இருந்து தமிழக அரசு காப்பாற்ற வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Wednesday, March 21, 2012

சுமங்கலி திட்டத்துக்கு எதிராக பிரசார இயக்கம்

 திருப்பூர், மார்ச் 20: கொத்தடிமை முறையின் நவீன வடிவமாக உள்ள சுமங்கலித் திட்டத்தை எதிர்த்து, பிரசார இயக்கம் நடத்துவது என மாவட்ட ஏஐடியுசி உழைக்கும் பெண்கள் அமைப்பு முடிவு செய்துள்ளது.

 ÷திருப்பூர் மாவட்ட ஏஐடியுசி உழைக்கும் பெண்கள் அமைப்புக் கூட்டம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் நடந்தது. அமைப்பின் தலைவர் வி.ஏ.ஜெயலட்சுமி தலைமை வகித்தார். தமிழ்நாடு ஏஐடியுசி மாநிலத் தலைவர் கே.சுப்பராயன், அகில இந்திய துணைத் தலைவர் வஹிதாநிஜாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 ÷மாவட்டத் தலைவர் சி.பழனிசாமி, பொதுச்செயலர் பி.ஆர்.நடராஜன், உழைக்கும் பெண்கள் அமைப்பின் பொதுச்செயலர் ஜி.சாவித்திரி மற்றும் அமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்றனர். புதிய நிர்வாகிகளாக ஜெயலட்சுமி (தலைவர்), சாவித்திரி (செயலர்) உள்பட 20 மாவட்டக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
 ÷கூட்டத்தில், பனியன், கட்டிடம் அமைப்புசாரா தொழில்களில் வேலை செய்யும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்தும், உரிமைகள் மறுக்கப்படுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
 பஞ்சாலைகளில் சுமங்கலித் திட்டம் என்ற பெயரில் இளம் பெண்களை பணியில் அமர்த்தி வேலை வாங்கும் முறை அதிகளவில் நடந்து வருகிறது. கொத்தடிமை நவீன வடிவமான சுமங்கலி திட்டத்தை எதிர்த்து பிரசார இயக்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
 

மாநில அளவிலான மாரத்தான் போட்டி திருப்பூரில்

 திருப்பூர், மார்ச் 20: மாநில அளவிலான மாரத்தான் போட்டி திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 25-ம் தேதி) நடக்கவுள்ளது.
 இதுகுறித்து, மாவட்ட தடகள சங்கச் செயலாளர் ரமேஷ் கூறியது:
 ÷நீல சிவலிங்கசாமி நினைவு மினி மாரத்தான் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு அவினாசி லிங்கேஸ்வரர் கோயிலில் துவங்கி, திருப்பூர் நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முடிகிறது. ஆண்களுக்கான 21 கிமீ தொலைவு மாரத்தான் போட்டி, 20 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண்கள் பங்கேற்கும் 8 கிமீ தொலைவு போட்டி, 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 5 கிமீ தொலைவு போட்டிகள் என மூன்று பிரிவுகளாக நடக்கின்றன.
 ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று பரிசுகள் மற்றும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும். 21 கிமீ ஆண்கள் பிரிவு, 8 கிமீ ஆண்கள், பெண்கள் பிரிவு போட்டிகள் மாநில அளவில் நடத்தப்படுகிறது. இதில் விருப்பமுள்ள அனைவரும் பங்கு பெறலாம்.
 ÷5 கிமீ சிறுவர், சிறுமியர் போட்டிகள் மாவட்ட அளவில் நடத்தப்படுகின்றன. போட்டியில் பங்கேற்கும் விரும்புவோர், நுழைவு படிவத்துடன் வயது சான்றிதழை இணைத்து, வியாழக்கிழமைக்குள் அனுப்ப வேண்டும். போட்டியை நிறைவு செய்யும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
 ÷தமிழ்நாடு தடகள கழகத் தலைவர் டபிள்யூ ஐ.தேவாரம், செயலாளர் ராஜேந்திரன், துணைத் தலைவர் சைலேந்திரபாபு, திருப்பூர் மாவட்டத் தலைவர் பாலகிருஷ்ணன், ஆட்சியர் மதிவாணன் ஆகியோர் பரிசுகளை வழங்க உள்ளனர்.
 ÷நுழைவு படிவங்களை திருப்பூர் மாவட்ட தடகள சங்கம், டிஎஸ்எண் 711 புதுதோட்டம், அரண்மனை புதூர், குங்கும மாரியம்மன் கோயில் பின்புறம் செரீஃப் காலனி, திருப்பூர் -4 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும், என்றார்.
Related Posts Plugin for WordPress, Blogger...