உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..
Showing posts with label Ms Office. Show all posts
Showing posts with label Ms Office. Show all posts

Monday, September 03, 2012

Microsoft Word-யில் Text-ஐ Table-ஆக மாற்றுவது எப்படி ?

சில நேரங்களில் இது நமக்கு தேவைப்படும், உதாரணமாக நாம் PDF கோப்புவிலிருந்துWord கோப்புக்கு மாற்றும் பொழுது, table-கள் சில நேரம் table-ஆக வராமல் text-ஆக வரும், ஆனால் நமக்கோ அது table-ஆக இருந்தால் நலம் என்று தோன்றும், அப்படிப்பட்ட நேரங்களில் இந்த டெக்னிக் மிகவும் உதவிகரமாக இருக்கும்.

Saturday, June 09, 2012

MS-Word-ல் text to table வசதி

வணக்கம் நண்பர்களே..! நம்மில் பலபேர் MS-word உபயோகித்துக் கொண்டிருப்போம். இதில் அடங்கியுள்ள வசதிகள் ஏராளம். அதில் ஒன்றுதான் TEXT TO TABLE வசதி..


இதில் உள்ள TEXT TO TABLE வசதியின் மூலம் உங்களுடைய டெக்ஸ்ட்டை டேபிளாக convert செய்துகொள்ள முடியும். 

text to table in ms-word
இதற்கு Insert மெனு சென்று table ஆப்சனை கிளிக் செய்து அதில் தோன்றும் வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Saturday, June 02, 2012

தமிழில் MS OFFICE 2007


<%MS Office இப்பொழுது தமிழில் வந்துள்ளது. எல்லாமே தமிழ் மயம். எல்லாவிதமான தொடர்புகளும் அமைப்புகளும் தமிழில் உள்ளன. நாம் ஆங்கிலத்தில் இதுவரை புரிந்துக்கொள்ளாத காரியங்கள் எல்லாம் எளிதாக காணமுடிகிறது. ஆங்கிலம் தெரியதவர்களும் கூட தெளிவாக புரிந்துக் கொள்ள முடியும். இதுவரை ஆங்கிலத்தில் பார்த்த நமக்கு இது ஒரு புது அனுபவத்தை கொடுக்கிறது. மேலும் இலக்கண பிழைகளை கூட இதில் காண்பிக்கிறது. இதிலிருந்து புதிய கணினி வார்த்தைகளை தெரிந்துகொள்ள முடிகிறது. மைக்ரோசாப் கம்பெனி இதை இலவசமாக கொடுக்கிறது. Microsoft Office Language Interface Pack 2007 – தமிழ் என்று அழைக்கபடும் இந்த மென்பொருளை நீங்கள் இங்கு தரவிறக்கி பயன்பெறுங்கள்.

பயன்படுத்துவதற்கான நெறிமுறைகள்:

  • Microsoft Office 2007 Language Settings -ஐ Start\All Programs\Microsoft Office\Microsoft Office Tools என்ற மெனுவிலிருந்து தொடங்கவும்.
  • Display Language என்ற தாவலிலிருந்து Display Microsoft Office menus and dialog boxes in:என்பதை தேர்ந்தெடுக்கவும். நீங்கள் காணவிரும்பும் மொழியை கீழ் தோன்றும் பட்டியலிலிருந்து தேர்ந்தெடுக்கவும். நீங்கள் தேர்ந்தெடுத்த மொழியே இப்போது இயல்புநிலை மொழியாக காட்சியளிக்கும்.
  • Display Language என்ற தாவலில் உங்கள் Office காட்சியை Windows காட்சியுடன் பொருத்துவதற்கான விருப்பம் இருக்கிறது. தற்போதுள்ள Windows -இன் மொழி உங்களுக்காக பட்டியலிடப்படும். உங்கள் Windows காட்சியுடன் பொருந்தும் Office காட்சியை அமைத்துக்கொள்ள Set the Microsoft Office display language to match the Windows display language என்ற தேர்வுப் பெட்டியை தேர்ந்தெடுக்கவும். Display Microsoft Office menus and dialog boxesஎன்ற பட்டியலில் நீங்கள் தேர்வு செய்ததை இந்த அமைப்பு மேலெழுதிவிடும்.
  • Editing Languages தாவலில் நீங்கள் இயக்க விரும்பும் மொழியை Available Editing Languages என்ற பட்டியலில் தேர்வு செய்து அதன்பிறகு Add என்பதைக் கிளிக் செய்யவும். நீங்கள் தேர்ந்தெடுத்த மொழியானது Enabled Editing Languages பட்டியலில் பட்டியலிடப்படும்.
  • Editing Languages தாவலில், உங்கள் முதன்மை திருத்தல் மொழியாக இருக்கவேண்டிய மொழியை Primary Editing Language பட்டியலில் தேர்ந்தெடுக்கவும்.
  • பின்னர் OK பொத்தானை கிளிக் செய்யவும்

Wednesday, April 04, 2012

வேர்டில் சிறந்த வழிகளில் கையாள வேண்டுமா!


வேர்ட் தொகுப்பில் அடிக்கடி நாம் பயன்படுத்தக் கூடிய சில வசதிகள் குறித்த முழுமையான உதவித் தகவல்களை இங்கு காணலாம்.
1. பைண்ட் அண்ட் ரீபிளேஸ்: Find and Replace என்பது வேர்ட் தொகுப்பில் சில சொற்களை மொத்தமாக எடிட் செய்வது மட்டுமின்றி, ஒரு டாகுமெண்ட்டில் இவற்றின் பயன்பாடு குறித்து அறிந்து கொள்வதற்கும் உதவு கிறது. சொற்கள் மட்டுமின்றி 
பார்மட்டிங், ஸ்பெஷல் கேரக்டர்கள், ஏன் காலியான ஸ்பேஸ் அடையாளங்கள் ஆகியவற்றை எடிட் செய்திடவும் உதவுகிறது. இந்த Find and Replace டயலாக் பாக்ஸ் வேண்டு மென்றால் மெனு செல்லாமல் கீ போர்டி லேயே அதற்கான ஷார்ட் கட் உள்ளது. Ctrl+H அழுத்தினால் இந்த வசதி கிடைக்கும்.
ஸ்பேஸ் கேரக்டரை இதில் எப்படி எடிட் செய்திட முடியும் என்று எண்ணுகிறீர்களா? அதற்கான சந்தர்ப்பம் எப்போது உருவாகும் என்ற கேள்வி எழுகிறதா? சில வேளைகளில் இதனையும் எடிட் செய்திட வேண்டியதிருக்கும். எடுத்துக்காட்டாக ஒருவர் ஒரு வாக்கியம் முற்றுப் பெற்றவுடன் அடுத்த வாக்கியம் முன் இரு ஸ்பேஸ் விட்டு தொடங்குவார். இது பழைய காலத்தில் டைப் ரைட்டர் வகை பார்மட்டிங். இப்போது ஒரு சிலர் இந்த பார்மட் வழியைக் கடைப்பிடித்தாலும் பலர் ஒரு ஸ்பேஸ் விட்டால் போதும் என்று எண்ணுகிறார்கள். அவர்கள் இந்த Find and Replace விண்டோ மூலம் Find What கட்டத்தில் இரு ஸ்பேஸ் இடைவெளியைனை முதலில் ஏற்படுத்தி பின் Replace With கட்டத்தில் ஒரு ஸ்பேஸ் இடைவெளியை ஏற்படுத்தி அமைக்கலாம்.

Friday, March 16, 2012

MS Office Word-சில கேள்வி பதில்கள்


கணினியை பயன்படுத்துபவர்கள் MS Office Word ஐ பயன்படுத்தாமல் இருப்பதில்லை. அடிக்கடி பயன்படுத்தும் போதும் இதில் சில சமயம் நமக்கு சில சந்தேகம் வருவது உண்டு. அப்படி எனக்கு தோன்றிய சந்தேகங்களையும்,  கிடைத்த பதில்களும் உங்களுக்கு இங்கே. உங்களுக்கு வேறு சந்தேகம் இருப்பின் கீழே கமெண்ட் பகுதியில் கேட்கலாம். 

1. ஒரு Word File- இல் உள்ள அனைத்து லிங்க்களையும்(Hyperlink) ஒரே கிளிக் மூலம் remove செய்வது எப்படி? 

இது மிகவும் எளிது. முதலில் CTRL+A கொடுத்து முழு Document-ஐயும் தெரிவு செய்து கொள்ளவும். பின்னர் CTRl+SHIFT+F9 இவற்றை ஒரு சேர அழுத்தவும். அவ்ளோதான் எல்லா லிங்க்களும் நீக்கப்பட்டு விடும். 

2. MS Office 2007 File களை 2003 இல் ஓபன் செய்வது எப்படி? 

Sunday, February 05, 2012

எக்‌ஷெல்லில் குறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு.

வணக்கம் நண்பர்களே எக்‌ஷெல் பற்றி நம்மில் அநேகருக்கு தெரியும் கிட்டதட்ட இதுவும் ஒரு கடல் போலத்தான் எக்‌ஷெல்லில் எத்தனையோ விதமான காரியங்களை செய்யமுடியும் அந்தளவுக்கு அதன் திறன் இருக்கும், சொல்லப்போனால் எக்‌ஷெல்லுக்கென்றே ஒரு தளம் ஆரம்பித்து எழுதலாம் ஆனாலும் நான் இந்த பதிவின் வாயிலாக ஒரு எக்‌ஷெல்லில் குறிப்பிட்ட செல்களை மட்டும் எப்படி எடிட் செய்யவிடாமல் செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.

நான் உபயோகிப்பது மைக்ரோசாப்ட்டின் ஆபிஸ் தொகுப்பு2010 (Microsoft Office 2010) ஆனால் இதே வழிமுறைதான் மற்ற தொகுப்புகளிலும் இருக்கும் சரி இப்போது புதிதாய் ஒரு எக்‌ஷெல் திறந்து கொள்ளுங்கள் (Start ->Run->type excel then enter) இனி பட்த்தில் காண்பித்திருப்பது போல மேலே இடது பக்கம் மூலையில் சிறிய கட்டம் போல இருக்கும் இடத்தில் இடது கிளிக் செய்வதன் மூலமாகவோ அல்லது Ctrl+A என்பதை அழுத்துவது மூலமாகவோ Format Cells என்பதை தெரிவு செய்யவும். 

Wednesday, February 01, 2012

ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ்-58-படவில்லைகளின் காட்சி

ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ்-58-படவில்லைகளின் காட்சி:

எந்தெந்தபடவில்லைகள் எந்த வரிசைகிரமத்தில் படவில்லைகாட்சியாக திரையில் காண்பிக்கப் படவேண்டும் ,
இந்தபடவில்லைக்காட்சியானது தானாகவே இயங்கவேண்டுமா அல்லது நாம் விரும்பியவாறு இயங்கவேண்டுமா? ,
படவில்லைகாட்சியில்இருபடவில்லைகளுக்கு இடையேயான இடைவெளிநேரம் எவ்வளவு இருக்கவேண்டும்,
படவில்லைகாட்சியில்படவில்லைகளின் அசைவூட்டம் எவ்வாறு அமைய வேண்டும்,
படவில்லைகாட்சியின்போதுசுட்டியின் பொத்தானை சொடுக்குவதால் என்ன நிகழ வேண்டும்

Friday, January 27, 2012

எக்ஸெல் - ஷார்ட்கட் கீகள்

CTRL+SPACEBAR – கர்சர் இருக்கும் நெட்டு வரிசை தேர்ந்தெடுக்கப்படும்.

SHIFT+SPACEBAR - கர்சர் இருக்கும் படுக்கை வரிசை தேர்ந்தெடுக்கப்படும்.

CTRL+HOME - ஒர்க் ஷீட்டின் தொடக்கத் திற்கு செல்ல

CTRL+END - ஒர்க்ஷீட்டின் இறுதிக்குச் செல்ல

SHIFT+F3 - பார்முலாவில் ஒரு பங்ஷனை ஒட்ட

CTRL+A - பார்முலா என்டர் செய்கையில் பங்ஷன் பெயர் டைப் செய்தவுடன் பார்முலா பேலட்டைக் காட்டும்

CTRL+A - பார்முலா என்டர் அல்லது எடிட் செய்யாதபோது அனைத்தையும் தேர்ந்தெடுக் கும்.

CTRL+‘ - (சிங்கிள் லெப்ட் கொட்டேஷன் மார்க்) செல் வேல்யூ மற்றும் செல் பார்முலா வை அடுத்தடுத்துக் காணலாம்.

Thursday, January 26, 2012

எம்.எஸ் ஆபீஸ் 2010ல் பழைய மெனுவை பெற எளிய மென்பொருள்


பல ஆண்டுகளாக எம்.எஸ். ஆபீஸ் 2003 ஐத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தவர்களுக்கு, எம்.எஸ். ஆபீஸ் 2010 தரும் ரிப்பன் வழி இன்டர்பேஸ் சிறிது தடுமாற்றத்தினைக் கொடுக்கும். ஆபீஸ் 2007 வெளியானவுடன், அதனு டைய ரிப்பன் இன்டர்பேஸ் வசதியினை ஒரு சிலர் புகழ்ந்தாலும், பலர் அதனை வரவேற் கவில்லை. தடுமாற்றத்துடன் தொடங்கிய பலரும், இதனை ஏன் மாற்றினார்கள்?
எது எங்கு இருக்கிறது என்று தெரிய வில்லையே? என்ற கேள்விகளுடன் இயங்குகிறார்கள். ஒரு சிலர், ஆபீஸ் 2003 தொகுப்பே போதும் என அதற்கு மாறிக் கொள்கிறார்கள். இப்போது வந்திருக்கும் ஆபீஸ் 2010 தொகுப்பில், ரிப்பன் இன்டர்பேஸ் அனைத்து அம்சங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இதிலும் பழைய படி மெனு எதிர்பார்ப்பவர்கள் அதிக பிரச்னையைச் சந்திக்கின்றனர். கூடுதல் நேரம் செலவழிக்க வேண்டியுள்ளதே என கவலைப்படுகின்றனர். 

Saturday, January 21, 2012

எக்ஸெலில் செல்களை இணைத்து நீளமான செல் அமைக்க

எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் மேலாக டேட்டாக்களின் தன்மையைக் காட்ட தலைப்பு கொடுக்க எண்ணுவோம். பலவகையான செல்களுக் கும் பொதுவாக ஒரு நீள செல் இருந்தால் இதற்கு வசதியாக இருக்கும்.

சிலர் இந்த வசதி பெற, செல்களின் முன் ஸ்பேஸ் பார் அழுத்தி இடைவெளியை உருவாக்குவார்கள். தேவைப்படும் நீளம் வரும்வரை இந்த ஸ்பேஸ் உருவாக்குவார்கள். இதற்கு எக்ஸெல் செல்களை இணைக்கும் வழியைத் தருகிறது.

இதனை மேற்கொண்டால், ஒன்றுக்கு மேற்பட்ட செல்களை இணைத்து அவற்றிற்கு தலைப்பு கொடுத்து, ஓரமாகவோ, நடுவிலோ அதனை அமைப்பது எளிதாகிறது.

Wednesday, January 18, 2012

பிழையைக் காட்டும் எக்ஸெல்


எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றில் பார்முலா ஒன்றை என்டர் செய்துள்ளீர்கள். உடனே எக்ஸெல் உங்களுக்கு #NAME என்று காட்டுகிறது. இது என்ன? எக்ஸெல் அறிந்து கொள்ள முடியாத ஒன்றை நீங்கள் பார்முலாவில் அமைத்திருக்கிறீர்கள்.

அது ஒருவரின் பெயர் அல்ல. ஏதோ ஒன்றின் பெயர்; ஆனால் அது எக்ஸெல் தொகுப்பிற்கு புரியவில்லை. எனவே இப்படி ஒன்றை தருகிறது. ஏதாவது ஒரு பங்சனாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக SUM என்பதற்கு டைப்பிங் பிழையாக SAM என நீங்கள் அமைத்திருக்கலாம்.

இது ஒரு சிறிய பார்முலாவில் உள்ளது என்றால் உடனே நீங்களே அந்த பார்முலாவினை மீண்டும் பார்த்து சரி செய்துவிடலாம். ஆனால் நீளமான பார்முலா என்றால் முழுதாக அனைத்தையும் பார்த்து எதில் பிழை உள்ளது என்று அறிய நேரம் ஆகுமே?

பிழையைக் கண்டறிய முடியவில்லை என்றால் ஏமாற்றமும் எரிச்சலும் தானே மிஞ்சும். இதற்கு எக்ஸெல் ஒரு மறைமுக உதவியைத் தருகிறது. இதற்கு உங்கள் பார்முலா முழுவதையும் ஆங்கிலத்த்தில் சிறிய எழுத்துக்களில் டைப் செய்திடுங்கள்.

பொதுவாக இது போல நீங்கள் சிறிய எழுத்துக்களில் டைப் செய்து என்டர் தட்டியவுடன் எக்ஸெல் அவை அனைத்தை யும் கேப்பிடல் எழுத்துக்களில் மாற்றும். இங்கு தான் நமக்கு உதவி கிடைக்கிறது. எக்ஸெல் தான் அறிந்து கொள்ளும் பார்முலாவின் பகுதியினை மட்டும் அவ்வாறு கேப்பிடல் எழுத்துக்களில் மாற்றும்.

Tuesday, January 17, 2012

தகவல்களை சேமிக்கும் எக்ஸெல் சீட் ?

அலுவலகப் பயன்பாட்டிற்காக தகவல்களை சேமிப்பதற்கு எக்ஸெல் சீட்டினை பயன்படுத்துவோம்.
எடுத்துக்காட்டாக மாணவர்கள் பல பாடப்பிரிவுகளில் பெற்ற மதிப்பெண்களை அமைக்கையில், அவற்றை வரிசை எண், தரவரிசைப் பட்டியல் போன்றவற்றின் அடிப்படையில் வகைப்படுத்த நினைக்கலாம். இதற்கு எக்ஸெல் புரோகிராம் வகைப்படுத்தும் வசதியான சார்ட்டிங்(Sorting) வசதியைத் தருகிறது.
இதிலும் பல சிக்கல்கள் நேரிட வாய்ப்புகள் உண்டு. அவற்றை எவ்வாறு புரிந்து கொண்டு தீர்க்கலாம் என்று இங்கு பார்க்கலாம்.

Monday, January 16, 2012

பவர்பாய்ன்ட் பிரசன்டேஷன் - டிப்ஸ்


ஒருவரின் எண்ணங்கள், திட்டங்கள், கருத்துக் கோவைகள் ஆகியவற்றை மற்றவர்களுக்கு விளக்க பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் புரோகிராம் ஒரு சிறப்பான சாதனம் ஆகும்.

மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகள், ஆய்வாளர்கள் அடிக்கடி கருத்தரங்களில், கூட்டங்களில் இதனைப் பயன்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். இந்த புரோகிராம் மூலம் பிரசன்டேஷன் பைல் தயாரிப்பில் பின்பற்ற வேண்டிய சில அடிப்படை கூறுகளைப் பார்க்கலாம்.

1. எப்போதும் ஒரே பேக் கிரவுண்டினை ஸ்லைட்களுக்குப் பயன்படுத்தவும். பிரசன்டேஷன் புரோகிராமுடன் ரெடியாகப் பல டிசைன் டெம்ப்ளேட்கள் கிடைக் கின்றன. இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து பிரசன்டேஷன் முழுவதும் அதனையே பயன்படுத்தவும்.

2. கலர்களைப் பயன்படுத்துகையில் ஒன்றுக் கொன்று எடுத்துக் காட்டும் வகையில் உள்ளதாக இருக்க வேண்டும். லைட் கலரில் எழுத்துகள் இருந்தால் பின்னணி சற்று டார்க்காக இருக்க வேண்டும். இதனை எப்படி அமைக்க முடியும் என்ற திண்டாட்டத்தில் இருந்தால், டிசைன் டெம்ப்ளேட்டுகளைப் பார்த்துப் புரிந்து கொண்டு செயல்படவும்.

Friday, January 13, 2012

டேட்டாவினை வகைப்படுத்துவதில் சிக்கலா?

அலுவலகப் பயன்பாட்டில் நாம் மிக அதிகமாக டேட்டாவினை எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் பயன்படுத்துகிறோம். இந்த தகவல்களை நாம் பல்வேறு வகைகளில் பட்டியலிட்டுப் பெற விரும்புவோம்.

எடுத்துக்காட்டாக, பொருட்கள் மற்றும் அவற்றின் விலை, வாங்கிய நாள் போன்ற தகவல்களை அமைக்கையில், விலைப்படி அல்லது வாங்கிய நாள் படி வகைப்படுத்திப் பார்க்க விரும்பலாம்.

இதே போல மாணவர் களின் பல பாடப் பிரிவுகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண்களை அமைக்கையில், இதே தேவை ஏற்படலாம். இதற்கு எக்ஸெல் புரோகிராம் வகைப்படுத்தும் வசதியான சார்ட்டிங் (Sorting) வசதியைத் தருகிறது.

இதிலும் நமக்குப் பல சிக்கல்கள் நேரிட வாய்ப்புகள் உண்டு. அவற்றை எவ்வாறு புரிந்து கொண்டு தீர்க்கலாம் என்று இங்கு பார்க்கலாம்.

Thursday, January 12, 2012

Microsoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க.


மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 பதிப்பில், வேர்டு, எக்சல் போன்ற பயன்பாடுகளில் ரிப்பன் மெனுவில் உள்ள வெவ்வேறு டேப்களில் அவற்றிற்கான கட்டளைகள் போதியப்பட்டிருக்கும்.  இவற்றில் நாம் அடிக்கடி உபயோகிக்கும் கட்டளைகளை ஒவ்வொரு டேபிளும் சென்று பயன்படுத்த வேண்டியுள்ளது. 

இதை மிகவும் எளிதாக்க ஆபீஸ் 2010 பதிப்பில் Customize the Ribbon எனும் புதிய வசதி மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இதனை மைக்ரோசாப்ட் வோர்ட் இல் எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம். 
ரிப்பன் மெனுவில் வலது க்ளிக் செய்து திறக்கும் Context menu வில் Customize the Ribbon என்பதை க்ளிக் செய்யவும். 

Monday, November 21, 2011

எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் சவுண்ட் பைல்



எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் உள்ள தகவல்களைக் காட்டிலும், நாம் தரும் விளக்கங்களைக் காட்டிலும், சில வேளைகளில் ஆடியோ இயக்கம் கூடுதல் விளக்கங்களைத் தரும்.


இதனால் ஒர்க்ஷீட்டினைப் பயன்படுத்து பவர்களுக்கு ஒரு மல்ட்டி மீடியா அனுபவம் கிடைக்கும். இதற்கென வசதியினை எக்ஸெல் கொண்டுள்ளது. இதற்கான செட்டிங்ஸ் வழி இதோ:

1. எங்கு ஆடியோ பைலை இணைத்து இடம் அமைக்க வேண்டுமோ, அதன் அருகே உள்ள செல்லைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 

2. Insert மெனு சென்று, அங்கு Object என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இது காட்டப்படாமல் (Not enabled and gray in colour) இருப்பின், உங்கள் செல் தேர்வில் சிறிய தவறு உள்ளது என்று பொருள். சரியாக இருந்தால், இங்கு ஆப்ஜெக்ட் டயலாக் பாக்ஸ் காட்டப்படும்.

3. இந்த பாக்ஸில் Create from File என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இதன் மேலாக, ஆடியோ பைலைத் தேர்வு செய்திட பிரவுஸ் பட்டனும், நீள் சதுரமும் கொடுக்கப்பட்டிருக்கும்.

இதனைப் பயன் படுத்தி, நீங்கள் இணைக்க விரும்பும் ஆடியோ பைலைத் தேர்ந்தெடுக்கவும். 

4. இந்த பாக்ஸிலேயே, Link to file மற்றும் Display as Icon என்பவை தரப்பட்டிருக்கும். இவற்றையும் தேர்ந்தெடுக்கவும். 

5. அனைத்தும் முடிந்த பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இப்போது ஒர்க் ஷீட்டில் நீங்கள் இணைக்க நினைத்த இடத்தில், ஆடியோ ஐகான் காட்டப்படும். இதில் கிளிக் செய்தால், அந்த பைல் இயக்கப்பட்டு ஒலிக்கும்.

Friday, November 18, 2011

மைக்ரோசாப் ஆபீஸ் அறிமுகம் - பாடம் 1

Sunday, September 11, 2011

தமிழில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 பாடம்: உங்கள் ஆதரவுக்கு நன்றி !

தமிழில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 பாடம்: உங்கள் ஆதரவுக்கு நன்றி !

தமிழில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 பாடம்: மைக்ரோசாப் ஆபிஸ் வேர்டு ( Microsoft Office Word) ப...

தமிழில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 பாடம்: மைக்ரோசாப் ஆபிஸ் வேர்டு ( Microsoft Office Word) ப...: மைக்ரோசாப் ஆபீஸ் ஓர் அறிமுகம் பாடம் - 1 மைக்ரோசாப் ஆபீஸ் எங்கே இருக்கிறது - பாடம் 2 மைக்ரோசாப் ஆபீஸ் வேர்டு அறிமுகம் - பாடம் 3 மைக்ரோச...

தமிழில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 பாடம்: உங்கள் ஆதரவுக்கு நன்றி !

தமிழில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 பாடம்: உங்கள் ஆதரவுக்கு நன்றி !
Related Posts Plugin for WordPress, Blogger...