உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..
Showing posts with label திருப்பூர். Show all posts
Showing posts with label திருப்பூர். Show all posts

Sunday, April 29, 2012

சிபிஎம் ஊத்துக்குளி ஒன்றியச் செயலாளர் பொய் வழக்கில் சிறையில் அடைப்பு காவல்துறையின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு கண்டனம்

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றியச் செயலாளர் ஆர்.குமாரை காவல் துறை யினர் பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொழிலாளர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய காவல்துறை அதி காரிகள் மீது கோட்டாட்சி யர் விசாரணை நடத்திட சிஐடியு கோரிக்கை விடுத்த தால், ஆத்திரத்தில் பழிவாங் கும் வகையில் குமாரை ஊத்துக்குளி காவலர்கள் கைது செய்தனர்.

காவல் துறையின் இந்த நடவடிக்கைக்கு மார்க் சிஸ்ட் கட்சியின் ஊத்துக் குளி ஒன்றியக் குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளரும், ஊத்துக்குளி பேரூராட்சி முன்னாள் தலைவருமான ஆர்.குமார் ஊத்துக் குளி ஆர்.எஸ். - குன்னத்தூர் சாலை யில் வசித்து வருகிறார்.

சனிக்கிழமையன்று அதி காலை 6 மணியளவில் காவ லர்கள் அவரது வீட்டுக்கு வந்து குமாரை திடீரென கைது செய்து அழைத்துச் சென்றனர்.

கடந்த மார்ச் 27ம் தேதி மார்க்சிஸ்ட் கட்சி தமிழகம் முழுவதும் தாராளமயக் கொள்கைக்கு எதிராக மறி யல் போராட்டம் நடத்தி யது. அதன் ஒரு பகுதியாக ஊத்துக்குளியில் நடை பெற்ற மறியலின் போது மார்க்சிஸ்ட் கட்சியினரி டம் காவல் துறையினர் அத்துமீறி நடந்து கொண் டனர். மேலும் இந்த சம்ப வத்திற்கு பழிவாங்கும் நோக் கத்தில் குமார் மீது காவல் துறையினர், அரசு அதிகாரி யை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு நிலுவை யில் இருந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஊத்துக்குளி பகுதி யில் ஊத்துக்குளி காவல் நிலைய எஸ்.ஐ., சேகர் மற் றும் பயிற்சி எஸ்.ஐ. ராமலிங் கம் ஆகியோர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மது அருந்தி விட்டு ஆட்டோவை ஓட்டி வந்ததாக இருவரை ஊத்துக் குளி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அதில் ஆறுமுகம் என்ற ஆட்டோ ஓட்டுநரை காவல் அதிகாரிகள் பகல் 11 மணியில் இருந்து மாலை 6 மணி வரை காவல்நிலை யத்தில் வைத்துத் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.

தமிழ் மாணவர்களின் தற்கொலைகளை கொச்சைபடுத்திய அண்ணா பல்கலைகழகம்

தமிழ் மாணவர்களின் தற்கொலைகளை கொச்சைபடுத்திய அண்ணா பல்கலைகழகம்:

 தமிழகத்தின் நம்பர் ஒன் கல்வி நிலையம் என்று
பெருமைப்படக்கூடிய அண்ணா பல்கலைக்கழகத்தில்
,  கிராமபுற வரும்
மாணவர்களின்  தொடர் தற்கொலைகளும்,
தற்கொலைகளின் காரணம் கண்டுபிடிக்காமல் மாணவர்களின் சாவை கொச்சைபடுத்தும் போக்கை
தொடர்ந்து செய்கிறது காவல்துறையும்,அண்ணா பல்கலைகழகமும்..




இந்த பல்கலைக்கழகத்தில் படித்த மணிவண்ணன் என்கிற மாணவர் கடந்த மாதம் தற்கொலை செய்துகொண்ட  அதிர்ச்சியிலிருந்த நமக்கு அடுத்த
சில நாட்களில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த மடப்பட்டுக்கு அருகேயுள்ள  கருவேப்பிலைபாளையம் கிராமத்தைச் சேர்ந்த
தைரியலட்சுமி
தற்கொலை செய்துகொண்டார் எனும் தகவல் கிடைத்த
நிலையில் தைரியலெட்சுமி, மணிவண்ணன் ஆகியோரின் வாழ்க்கைஅ பார்ப்பதற்கு முன்னால்
..! அண்ணா பல்கலைகழகத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் செத்தபிறகு கொச்சைபடுத்தபட்டதை
பார்ப்போம்..

Saturday, April 14, 2012

ஊத்துக்குளி அருகே 60 குடிசைகள் எரிந்து சாம்பல்

ஊத்துக்குளி அருகே 60 குடிசைகள் எரிந்து சாம்பல்
ஊத்துக்குளி, ஏப். 12-
 
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி- திருப்பூர் செல்லும் வழியில் கொடியம்பாளையம் 4 ரோடு உள்ளது. இங்கு தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிறுவனத்தில் வடமாநிலத்தை சேர்ந்த 250 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் அதே பகுதியில் குடிசை அமைத்து தங்கி வருகின்றனர்.
 
 இந்நிலையில் இன்று காலை ஒரு குடிசையில் யாரும் எதிர்பாராத விதத்தில் தீ பற்றியது. இந்த தீ மளமளவென மற்ற குடிசைகளுக்கும் பரவியது. இதனால் குடிசைக்குள் இருந்தவர்கள் பதறிப்போய் அலறியடித்துக்கொண்டு குடிசையை விட்டு வெளியே ஓடி வந்தனர். இந்த தீ விபத்து குறித்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
 
தீயணைப்பு நிலைய அதிகாரி ராகவன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் 60 குடிசைகள் தீ விபத்தில் எரிந்து சாம்பலானது. போராடி தீ அணைக்கப்பட்டது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிய வருகிறது.இது குறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.

Friday, April 13, 2012

திருப்பூரின் எதிர்காலம் என்ன ஆகும்?

திருப்பூரின் எதிர்காலம் என்ன ஆகும்?


டாலர் சிட்டி என்று புகழப்படும் பின்னலாடை ஏற்றுமதி நகரமான திருப்பூரின் எதிர்காலம் என்ன ஆகும் என்று பனியன் தொழில் துறையினர் மட்டுமல்லாது திருப்பூரின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட பல தரப்பினரும் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர். உலகமய காலகட்டத்தில் வளர்ச்சியின் அடையாளமாக முன்வைக்கப்பட்ட திருப்பூர், இன்று அதன் எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற கேள்விக்குள் தள்ளப்பட்டு விட்டது, இதுவே தற்போதைய வளர்ச்சியின் நிலையற்ற தன்மையை தெளிவாக உணர்த்துவதாக இருக்கிறது.திருப்பூரில் 1980களின் பிற்பகுதியில் தொடங்கிய பின்னலாடை ஏற்றுமதி, வளர்ச்சிப் பாதையில் தான் சென்று கொண்டிருந்தது. ஆண்டுக்கு சராசரியாக 20 சதவிகிதத்தைத் தாண்டிய பாய்ச்சல் வேக ஏற்றுமதி வளர்ச்சியை இந்நகரம் பதிவு செய்தது. ஆனால் இந்த ஒளிமயமான வளர்ச்சி, 2008ம் ஆண்டு திடீரென இருள் சூழ்ந்த வீழ்ச்சியாக மாறிவிட்டது. (பார்க்க அட்டவணை.)


அட்டவணைஆண்டு - (ஏற்றுமதி மதிப்பு ரூபாய் கோடியில்)1991 - 429.481992 - 774.931993 - 1162.431994 - 1318.001995 - 1591.831996 - 1897.001997 - 2255.001998 - 2619.001999 - 3067.00 2000 - 3581.002001 - 3528.002002 - 3250.002003 - 3896.002004 - 4468.752005 - 6500.002006 - 8500.002007 - 11000.002008 - 9950.002009 - 9500.002010 - 12500.002011 - 12500.002012 - 12300.00
----------------------------------------------------

Friday, February 17, 2012

திருப்பூர் மின்வெட்டால் வேலை நேரம் மாறியதால் பரிதவிப்பு

தொடர் மின்வெட்டு காரணமாக, தொழிலாளர்களின் பணி நேரத்தை சில பனியன் நிறுவனங்கள் மாற்றி அமைத்துள்ளன. அதனால், தொழிலாளர்
களில் பலர், "பீஸ் ரேட்' நடைமுறைக்கு மாறத் துவங்கியுள்ளனர்.இம்மாத துவக்கம் முதல் மின்வெட்டு எட்டு மணி நேரமாக அதிகரிக்கப்பட்டது. திருப்பூரில் காலை 6.00 முதல் 9.00 வரை; மதியம் 12.00 முதல் பிற்பகல் 3.00 வரை; மாலை 6.00 முதல் 7.00 மணி; இரவு 8.00 முதல் 9.00 மணி வரை என்று சில பகுதிகளிலும், காலை 9.00 முதல் 12.00 வரை; பிற்பகல் 3.00 முதல் 6.00 வரை; இரவு 8.00 முதல் 9.00; மேலும், 10.00 முதல் 11.00 வரை என இரண்டு பிரிவுகளாக எட்டு மணி நேரத்தை பிரித்து, மின்வெட்டை மின்வாரியம் அமல்படுத்தியுள்ளது.திடீரென அதிகரிக்கப்பட்ட மின்வெட்டால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, விசைத்தறி, டையிங், பிரின்டிங், காம்பாக்டிங் உள்ளிட்ட பனியன் சார்ந்த பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் கிடைப்பதில் சிக்கல், மற்ற நிறுவனங்களுடன் போட்டி காரணமாக, ஏற்கனவே போதிய அளவில் ஆர்டர் பெற முடியாமல், ஆர்டர்கள் கிடைத்தாலும் ஆட்கள் பற்றாக்குறையால், சிறப்பாக முடிக்க முடியாமல் சிறு பனியன் நிறுவனங்கள் தடுமாறி வந்தன.தற்போது, மின்வெட்டு இவர்களை மேலும் சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. வாரத்தில் ஒரு நாள் மின்விடுமுறை விடுவது குறித்து அரசு, மின்வாரிய உயரதிகாரிகள் ஆலோ சனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், "ஷிப்டு' நேரத்தை சில பனியன் நிறுவனங்கள் மாற்றியுள்ளன.பனியன் தொழிலாளர்கள் கூறியதாவது:காலை 9.00 முதல் 12.00 மணி வரை மின்வெட்டு ஏற்படுவதால், அத்தகைய நேரத்தில் ஜெனரேட்டர் பயன்படுத்த சிறு பனியன் நிறுவனங்கள் விரும்புவதில்லை. மதியம் 12.00க்கு பின், பணியை துவக்குகின்றன. அதன் பின்பே, டெய்லர், செக்கிங், பேக்கிங், கைமடி உள்ளிட்ட தொழிலாளர்களை வரச்சொல்கின்றனர். பிற்பகல் 3.00 மணி முதல் 6.00 மணி வரை ஓய்வு கொடுக்கின்றனர். 

திரும்பவும் 6.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை வேலை கொடுக்கின்றனர். ஓய்வில்லாமல் தொடர்ச்சியாக பணியாற்ற வேண்டும். எட்டு மணி நேர வேலையை கணக்கிட, சில நிறுவனங்கள் இந்நடைமுறையை கடந்த 10 நாட்களாக பின்பற்றி வருகின்றன. உள்ளூரில் இருப்பவர்கள் பலர், மின்வெட்டு நேரத்தில் வீட்டுக்குச் சென்று விடுகின்றனர். ஆனால், வெளியூரில் இருந்து வருபவர்கள், கம்பெனிகளிலேயே இருக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்படுகிறது.பனியன் நிறுவனங்களின் இத்தகைய "பார்முலா'வால், சீனியர் தொழிலாளர்கள் பலர் "ஷிப்டு' முறையில் இருந்து "பீஸ் ரேட்'டுக்கு மாறி வருகின்றனர். மின்வெட்டு ஏற்படாத நேரத்தில் மட்டும் வந்து வேலைகளை முடித்துக் கொடுத்து, அதற்கேற்ப சம்பளம் பெற்றுக் கொள்கின்றனர். இரவு 11.00 மணி வரை நிறுவனங்களில் முடங்கிக் கிடப்பதில்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு "ஹால் டிக்கெட்' வினியோகம்

பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு "ஹால் டிக்கெட்' வழங்கும் பணி, திருப்பூரில் நேற்று துவங்கியது.பிளஸ் 2 பொதுத்தேர்வு வரும் மார்ச் 8ல் துவங்குகிறது. திருப்பூர் மாவட்டத்தில் நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் 2 தேர்வு எழுத தனித்தேர்வர்கள் 1,182 பேர் விண்ணப்பித்துள்ளனர்.உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளி, பெரியாயிபாளையம், இடுவாய் அரசு மேல்நிலைப்பள்ளிகள், தாராபுரம் சி.எஸ்.ஐ., பள்ளி ஆகிய நான்கு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தனித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான "ஹால் டிக்கெட்' வழங்கும் பணி, பழனியம்மாள் மாநகராட்சிபெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று துவங்கியது.

முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி கூறியதாவது:திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்களுக்கான "ஹால் டிக்கெட்' வரும் 18 வரை வழங்கப்படும். தனித்தேர்வர்கள் குறிப்பிட்ட தேதிக்குள் காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை பெற்றுக்கொள்ளலாம்."ஹால் டிக்கெட்' பெறுவோர் அதில் உள்ள பெயர், பிறந்த தேதி, பதிவு எண், தேர்வு மையம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். தவறு இருப்பின், கூடுதல் செயலாளர் (மேல்நிலை), அரசுத்தேர்வுகள் இயக்ககம், சென்னை-6 என்ற முகவரியில் நேரடியாகவோ, தபால் மூலமோ தெரிவிக்க வேண்டும். "ஹால் டிக்கெட்' கிடைக்காதவர்கள், குறிப்பிட்ட நாளுக்குள் தேர்வு எழுத விண்ணப்பித்ததற்கான சான்றுகளை மேற்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.செய்முறைத்தேர்வில் 40 மதிப்பெண்ணுக்கு குறைவாக பெற்று, தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக செய்முறைத்தேர்வை மீண்டும் எழுத வேண்டும்; எழுத்து தேர்வுக்கும் வர வேண்டும். மொழிப்பாடங்கள், சிறப்பு மொழி பாடங்களில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு நடைபெறும் தேதிகளை, அந்தந்த தேர்வுமைய முதன்மை கண்காணிப்பாளரை அணுகி, வரும் 20க்குள் தெரிந்து கொள்ள வேண்டும். தேர்வு மையத்துக்கு செல்லும்போது, மேல்நிலை தேர்வு எழுத விண்ணப்பித்தபோது எடுத்த வண்ண புகைப்பட நகல் ஒன்றை கண்டிப்பாக கொண்டுசெல்ல வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Saturday, February 11, 2012

திருப்பூர் எஸ்பி அலுவலகம் முன் பனியன் வியாபாரி தீக்குளிப்பு


திருப்பூர் : விசாரணையின்போது தன்னை போலீசார் டார்ச்சர் செய்ததாக கூறி, திருப்பூர் எஸ்.பி. அலுவலகம் முன்பு பனியன் வியாபாரி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இது குறித்து அவர், நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலத்தையும் பதிவு செய்தார். திருப்பூரையடுத்த 15 வேலம்பாளையம், அமர்ஜோதி கார்டனைச் சேர்ந்தவர் காளிதாஸ் (45). செகன்ட்ஸ் பனியன் வியாபாரி. இவரது மனைவி மருதம்மாள் (37). இவர்களது மகள் பிரியங்கா (10). அன்னூரில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். சர்வதேச செஸ் வீராங்கனை. சில ஆண்டுகளுக்கு முன்னர் பனியன் வியாபாரம் செய்து வந்த காளிதாஸ் கோவை, புலியகுளத்தைச் சேர்ந்த ரவி என்ற நூல் வியாபாரியுடன் கொடுக்கல் வாங்கல் நடந்து வந்துள்ளது. வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக காளிதாசும், அவரது நண்பர் ஸ்ரீதர் (42) என்பவரும், தற்போது செகண்ட்ஸ் பனியன் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Friday, February 10, 2012

சாலை பராமரிப்பு பணியை தனியாரிடம் வழங்க எதிர்ப்பு

அவிநாசி : "சாலை பராமரிப்பு பணியை தனியாரிடம் வழங்கக் கூடாது,' என்று சாலை பணியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அவிநாசி கிளை, நெடுஞ்சாலைத்துறை பணியாளர் சங்க நான்காவது மாநாடு, கிளை தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. செயலாளர் ராமன் வேலை அறிக்கையையும், பொருளாளர் முருகேசன் வரவு - செலவு அறிக்கையையும் தாக்கல் செய்து பேசினர். மாநில தலைவர் சிங்கராயன் சிறப்புரை ஆற்றினார். மாநாட்டில், "நான்கு மாத காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்; மாத சம்பளத்தை அரசு கருவூலம் மூலம் வழங்க வேண்டும்; சாலை பராமரிப்பை தனியாரிடம் வழங்கக் கூடாது; இறந்த சாலை பணியாளர் குடும்பத்துக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும்,' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் நடராஜன், சாலை பணியாளர் சங்க திருப்பூர் கோட்ட பொறுப்பாளர்கள் கருப்பன், கந்தசாமி ஆகியோர் பேசினர். வட்ட கிளை பொருளாளர் முருகேசன் நன்றி கூறினார்.


28ல் ஸ்டிரைக்; சி.ஐ.டி.யு., அழைப்பு

திருப்பூர் : மத்திய அரசை கண்டித்து, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 28ல் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடத்த சி.ஐ.டி.யு., அழைப்பு விடுத்துள்ளது. இதன் மாவட்ட குழு கூட்டம், மாவட்ட தலை வர் உன்னிகிருஷ்ணன் தலைமையில் திருப்பூரில் நடந்தது; மாநில தலைவர் சிங்காரவேல், மாவட்ட செயலாளர் சந்திரன் முன்னிலை வகித்தனர். "விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண் டும்; அதற்கேற்ப பஞ்சப்படி வழங்க வேண்டும்; தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்த வேண்டும்; அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு முழுமையாக சமூக பாது காப்பு வழங்க மத்திய அரசு ஒரு லட்சம் கோடி நிதி ஒதுக்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக அனைத்து தொழிலாளர்களுக்கும் 10 ஆயிரம் வழங்க வேண்டும்,' என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள், பொதுத்துறை அமைப்புகள், வங்கிகள், எல்.ஐ.சி., அரசு ஊழியர் சங்கங்கள் சார்பில் பிப்., 28ல் நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது. இதில், சி.ஐ.டி.யு., வுடன் இணைக்கப்பட்ட சங்கங்கள் முனைப்போடு பங்கேற்க வேண்டும். பனியன், கட்டுமானம், விசைத்தறி, கைத்தறி, பாத்திரம், உள்ளாட்சி, இன்ஜினியரிங், சுமைப்பணி, அரசு போக்குவரத்து, மின்சாரம், கூட்டுறவு, "டாஸ்மாக்', அங்கான்வாடி, தனியார், மோட்டார், ஆட்டோ, சாலையோர கடைகள், பஞ்சாலை, டையிங், சலவை மற்றும் பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்க வேண்டும் என மாவட்ட சி.ஐ.டி.யு., சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

Thursday, February 09, 2012

திருப்பூர் அரசு கேபிள் "டிவி'யில் அனுமதியற்ற சேனல்கள் ஒளிபரப்பு

திருப்பூர் : திருப்பூரில் அரசு கேபிளில், அனுமதியற்ற மற்றும் துண்டிக்கப்பட்ட சேனல்களின் ஒளிபரப்பு துவங்கியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் அரசு கேபிள் "டிவி', கடந்த ஆண்டு செப்டம்பரில் இயங்கத் துவங்கியது. அப்போது, ஆளும்கட்சியினரின் ஆதரவோடு சில உள்ளூர் சேனல்கள், ஒளிபரப்பை துவக்கின. கடந்த நவம்பரில் உள்ளூர் சேனல் ஒளிபரப்பு உரிமைக்கு டெண்டர் நடந்தது. இதில், ஏற்கனவே சேனல் இயக்கி வந்தவர்கள் உட்பட 27 பேர் பங்கேற்றனர். குறைந்தபட்ச தொகையாக 1.1 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், மூலனூரைச் சேர்ந்த தி.மு.க., ஆதரவு பிரமுகர் ஒருவர், அதிகபட்சமாக 6.1 லட்சம் ரூபாய்க்கு ஏலம் கோரினார். இதையடுத்து அதே தொகைக்கு சம்மதம் தெரிவித்து மேலும் மூன்று பேர் முன்வந்தனர். இந்த நான்கு பேரிலும் ஒருவர் மட்டும் உள்ளூர் சேனல் ஒளிபரப்பில் ஈடுபட்டு வந்தார்.

Monday, February 06, 2012

திருப்பூர் :அனுமதியற்ற சேனல்கள் ஒளிபரப்பை நிறுத்த உத்தரவு

திருப்பூர் :அனுமதியின்றி, அரசு கேபிள் "டிவி'யில் இதுவரை ஒளிபரப்பாகி வந்த உள்ளூர் சேனல்களை நிறுத்த உத்தரவிட்டுள்ளது. இதனால், கடந்த ஆறு மாதங்களாக உள்ளூர் சேனல்களை ஒளிபரப்பிய சேனல் உரிமையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
அரசு கேபிள் "டிவி' கார்ப்பரேஷன் தற்போது முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆளும்கட்சி பிரமுகர்கள் ஆதரவுடன் பல்வேறு உள்ளூர் சேனல்கள் இயக்கப்பட்டன. இவை சோதனை முறையில் ஒளிபரப்பு செய்வதாகவும், முறைப்படி டெண்டர் முடிவானதும், இத்தகைய சேனல்கள் நிறுத்தப்படும் என்றும் துவக்கத்தில் தெரிவிக்கப்பட்டது.
உள்ளூர் சேனல் ஒளிபரப்புக்கு டெண்டர் முறை கையாளப்பட்டது. இதில், மாற்றுக்கட்சியினர் அதிக தொகைக்கு உள்ளூர் சேனல் உரிமையை ஏலம் கேட்டனர்.

Saturday, February 04, 2012

அதிகரிக்கும் மின்தடை

திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டு வரும் அறிவிக்கப்படாத மின்தடையால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மின் தட்டுப்பாட்டால், மின்தடை ஏற்படுவதாக, மின்வாரிய அதிகாரி தெரிவித்தார். காலை 6.00 முதல் மாலை 6.00 மணி வரை, சுழற்சி முறையில் தினமும் நான்கு மணி நேரம் மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது. மதியம் 12.00க்குள் இரண்டு மணி நேரம்; மாலை 6.00க்குள் இரண்டு மணி நேரம் என தினமும் நான்கு மணி நேரம் அறிவிக்கப்பட்ட மின்தடை, திருப்பூர் மாவட் டத்தில் அனைத்து பகுதிகளிலும் தொடர்கிறது. இது தவிர, மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மாதத்தில் ஒரு நாள் காலை 8.00 முதல் மாலை 6.00 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. அவ்வப்போது, பகல் மற்றும் இரவு நேரங்களில் தலா 45 நிமிடம் வீதம் ஒன்றரை மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது.கடந்த சில நாட்களாக, திருப்பூர், அவிநாசி, பல்லடம், காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில், மின்தடை நேரம் அதிகரித்துள்ளது. தினமும் ஆறு மணி நேரம் முதல் ஏழு மணி நேரம் வரை மின்தடை செய்யப்படுவதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். தொடர்ச்சியாக, நான்கு முதல் ஐந்து மணி நேரம் மின் வினியோகம் நிறுத்தப்படுவதால், அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள முடியாமல் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.இரவிலும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக மின்தடை தொடர்கிறது. தொழிற்சாலைகளிலும், தொழில் நிறுவனங்களிலும் மின்தடையால் பலத்த பாதிப்பு ஏற்படுகிறது; கடைகளில் வர்த்தகம் பாதிக்கிறது. மின்சாரம் சார்ந்த அன்றாட தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில், பெண்கள் சிரமப்படுகின்றனர்.திருப்பூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நிர்மலதாவிடம் கேட்டபோது, ""கடந்த சில நாட்களாக மக்களிடம் மின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், பற்றாக்குறை ஏற்படுகிறது; மின் தட்டுப்பாட்டால், அறிவிக்கப்படாத மின்தடையை தவிர்க்க முடியவில்லை. காற்றாலை மூலமும் மின்சாரம் கிடைப்பதில்லை; குளிர்காலமாக இருந்ததால், சில மாதங்களாக மின்விசிறிகள் மற்றும் ஏ.சி., போன்றவை பயன்பாடு வெகுவாக குறைந்திருந்தது. தற்போது பகலில் அவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், மின் பற்றாக்குறையால் மின்தடை செய்யப்படுகிறது. மின்வினியோகத்தில் எவ்வித குளறுபடியும் ஏற்படவில்லை,'' என்றார்.

திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் வீணாகும் எல்.சி.டி., "டிவி'கள்

திருப்பூர் : தொழில்நுட்ப பணியாளர்கள் இல்லாத காரணத்தால், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் பொருத்தப்பட்ட எல்.சி.டி., "டிவி'கள் உபயோகமின்றி, வீணாகி வருகின்றன. திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து செல்லும் ரயில்கள், ரயில் வந்து கொண்டிருக்கும் இடம், வரும் நேரம், தாமதம், ரயில் எண் உள்ளிட்ட விவரங்களை, பயணிகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள வசதியாக, ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் எல்.சி.டி., "டிவி' பொருத்தப்பட்டது. பயணிகள், ஒவ்வொரு முறை ரயில்வே அதிகாரிகளிடம் சென்று விவரம் கேட்காமல், எல்.சி.டி., "டிவி'களை பார்த்து தெரிந்து கொண்டனர். கடந்த இரு வாரங்களாக, அவற்றில் ரயில் வரும் நேரங்கள் ஒளிபரப்பு செய்யப்படுவதில்லை. ரயில் வரும் விவரங்களை தெரிந்து கொள்ள, டிக்கெட் கொடுக்கும் அலுவலர்கள், பாதுகாப்பு அதிகாரிகளை பயணிகள் நச்சரிக்கின்றனர். ஒரு "கவுன்டர்' மட்டுமே இருப்பதால் டிக்கெட் கொடுப்பது, பயணிகளுக்கு பதில் சொல்வது என இடைஞ்சல் ஏற்படுகிறது. ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில் நேரம், ரயில் எங்கு வந்து கொண்டிருக்கிறது; எவ்வளவு நேரம் தாமதம் என்ற விவரங்கள் துல்லியமாக தெரிந்தால் மட்டுமே அறிவிக்க முடியும். தகவல் தொழில் நுட்ப துறையில், இதற்கென படிப்பு முடித்த பணியாளர்கள் இல்லாமல் இருப்பதால், எல்.சி.டி., "டிவி'யில் ரயில் வரும் விவரங்களை ஒளிபரப்ப முடியாமல் நிறுத்தி வைத்துள்ளோம். ""முதலில் நியமிக்கப்பட்ட பணியாளர்கள், வேறு இடங்களுக்கு மாறுதலாகிச் சென்று 
விட்டனர். புதிய பணியாளர்கள் நியமித்தபின்பே மீண்டும் ஒளிபரப்பப்படும், என்றார்.

Friday, February 03, 2012

கேபிள் கட்டுப்பாட்டு அறைக்கு மீண்டும் வந்தது ஜெனரேட்டர்

திருப்பூரில் உள்ள ரசு கேபிள் "டிவி' கட்டுப்பாட்டு அறைக்கு மீண்டும் ஜெனரேட்டர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு கேபிள் "டிவி' கட்டுப்பாட்டு அறை உள்ளது. இங்கு, ஜெனரேட்டர் வசதி இல்லை. அதனால், மின் தடை நேரங்களில் கேபிள் ஒளிபரப்பு பாதித்தது. இதற்கு தீர்வு காணும் வகையில், கேபிள் ஆபரேட்டர்கள், தங்கள் செலவில் ஜெனரேட்டரை வாடகைக்கு பெற்று இணைப்பு வழங்கினர். மாத வாடகையாக 22 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தினமும் சராசரியாக 300 ரூபாய் டீசல் செலவாகியது. இதற்கு கேபிள் "டிவி' நிறுவனம் சார்பில் எந்த வகையிலும் செலவிட முடியாத நிலை உள்ளது. அதனால், திருப்பூர் நகரப் பகுதியில் உள்ள கேபிள் ஆபரேட்டர்கள் செலவை ஏற்றுக்கொண்டனர்.இரண்டு நாட்களுக்கு முன், வாடகை செலுத்தும் பிரச்னை காரணமாக ஜெனரேட்டர் இணைப்பு துண்டிக்கப்பட்டு, திரும்ப எடுத்துச் செல்லப்பட்டது. இதன் காரணமாக, கேபிள் ஒளிபரப்பு மீண்டும் பாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக, "தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.தற்போது, ஜெனரேட்டருக்கான வாடகை மற்றும் பராமரிப்பு செலவுகள் என 33 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டு விட்டது. மீண்டும் ஜெனரேட்டர் கொண்டு வரப்பட்டு, பொருத்தப்பட்டுள்ளது. வரும் 5ம் தேதி திருப்பூர் வரும் அரசு கேபிள் "டிவி' கார்ப்பரேஷன் தலைவரிடம், ஜெனரேட்டர் பிரச்னை தொடர்பாக முறையிட கேபிள் ஆபரேட்டர்கள் திட்டமிட்டுள்ளனர்.

உழவர் பாதுகாப்புத் திட்ட பட்டியல் வெளியீடு

 திருப்பூர் மாவட்டத்தில் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளவர்களின் பட்டியல் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் தங்கள் பெயர் விடுபட்டிருந்தால் உழவர்கள், உழவுத்தொழில் சார்புடையோர் தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் ஆட்சியர் எம்.மதிவாணன் தெரிவித்துள்ளார்.
÷இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி:
 நஞ்சை நிலமாக இருந்தால் 2.5 ஏக்கர், புஞ்சை நிலமாக இருந்தால் 5 ஏக்கர் அளவுக்கு மிகாமல் சொந்தமாக விவசாயம் செய்வோர், விவசாயம் சார்ந்த தொழிலில் கூலி வேலை பார்ப்போர், சிறு குறு விவசாயிகள் இத்திட்டத்தில் சேரத் தகுதி படைத்தவர்களாவர். அத்துடன் தோட்டக்கலை, பட்டுப்புழு வளர்ப்பு, புல் வளர்ப்பு, தோட்ட விளைபொருள் உற்பத்தி, மேய்ச்சலுக்கு பயன்படுத்தும் நிலம் வைத்திருப்போர், பால் பண்ணை, கால்நடை வளர்ப்பு, மரம் வளர்ப்பு, உள்ளூர் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவோரும் இத்திட்டத்தில் சேரலாம். வயது வரம்பு 18 முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும்.

Wednesday, February 01, 2012

பிப்., 19ல் சொட்டு மருந்து வழங்க முடிவு

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, வரும் 19 மற்றும் மார்ச் முதல் தேதி சொட்டு மருந்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
போலியோ என்ற பக்கவாத நோய் வராமல் தடுக்க, ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் இருமுறை சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் ஒரே நாளில் சொட்டு மருந்து வழங்குவதன் மூலம் நோய்க்கான கிருமியை முற்றிலும் ஒழிக்க முடியும் என டாக்டர்கள் நம்புகின்றனர்.
இதற்காக, சொட்டு மருந்து எவ்வளவு தேவை என கணக்கெடுப்பு பணி, கடந்த ஜன., 16ல் துவங்கியது. பழைய மையங்கள் எண்ணிக்கை, குழந்தைகள் பெருக்கம், சுகாதார செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டது.
சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் ரகுபதி கூறியதாவது:
திருப்பூர் மாவட்டத்தில் எவ்வளவு குழந்தைகள் இருக்கின்றன என துறை சார்ந்த கணக்கெடுப்பு முடித்து சுகாதாரத்துறைக்கு அறிக்கை சமர்பித்துள்ளோம். பிப்., 19ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல்கட்டமாகவும், மார்ச் முதல் தேதி (வியாழக்கிழமை) இரண்டாம் கட்டமாகவும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள, வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது; இத்தேதியே உறுதி செய்யப்படும்.
பொது இடங்களில் அமைக்கப்படும் முகாம்களுக்கு, கடந்த ஆண்டை விட, கூடுதலாக சொட்டு மருந்து வழங்கப்படும். வதந்திகளை தவிர்க்க முன்னெச்சரிக்கையாக, கிராம மக்களிடம் சுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம், என்றார்.

சிவன்மலை கோயில் தைப்பூச தேர்த்திருவிழா


ருத்துகள்
திருப்பூர், : காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலில் தைப்பூச தேர் திருவிழா வருகிற 7-ம் தேதி நடக்கிறது.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே உள்ள சிவன்மலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. மலைமீது அமைந்துள்ள இந்த கோவிலில் தைப்பூச தேர் திருவிழா ஆண்டு தோறும் நடைபெறும். இந்த ஆண்டுக்கான தேர் திருவிழா நேற்று (29ம் தேதி) மலை அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. 

பனியன் தொழிலாளர் சம்பள உயர்வு: சைமா, தொழிற்சங்கம் உடன்பாடு

பனியன் தொழிலாளர் சம்பள உயர்வுப் பிரச்னையில் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா), தொழிற்சங்க நிர்வாகிகளிடையே சுமுக உடன்பாடு ஏற்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இருப்பினும், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்துடனான பேச்சு மீண்டும் தோல்வியில் முடிந்தது.
÷பனியன் தொழிலாளர்களுக்கான 3 ஆண்டு சம்பள ஒப்பந்தம் கடந்த 2010 டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. தொடர்ந்து, 2011 ஜனவரி 1-ம் தேதி முதல் புதிய சம்பள உயர்வு வழங்கியிருக்க வேண்டிய நிலையில் ஓராண்டுக்கு மேலாகியும் ஒப்பந்தம் ஏற்படவில்லை. இது தொடர்பாக உற்பத்தியாளர் சங்கங்களான சைமா, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்துடன் தொழிற்சங்க நிர்வாகிகள் நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

அவினாசியில் மின் கோபுரம் அமைக்கும் பணி மீண்டும் தொடங்கியது

தமிழ்நாடு மின்வாரியத் துறையின் மேட்டூரில் இருந்து கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி வரை உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கும் பணியை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினர்.
 
இந்த நிலையில் அவினாசியை அடுத்த சுண்டக்காம்பாளையம் அருகே உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கும் பணியில் மின்வாரிய அலுவலர்கள் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இந்த பகுதியில் குடியிருப்புகள் மற்றும் விவசாயம் உள்ள பகுதி, இங்கு உயர் அழுத்த மின் கோபுரம் அமைப்பதால் எங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே மின் கோபுரம் அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

Tuesday, January 31, 2012

போலீஸ்சார் எஸ்எம்எஸ் அனுப்பினால் வாகனத்தின் முழு விவரம் பெறலாம்!

குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) மூலமாக ஒருசில விநாடிகளில் எந்தவொரு வாகனத்தின் முழு விவரங்களையும் பெற்றிடும் புதிய தொழில்நுட்பத்தை திருப்பூர் மாவட்ட காவல்துறை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் வாகனத் திருட்டு, விபத்து, விதிமுறை மீறல் போன்றவற்றைக் குறைக்க முடியும் என்று போலீஸôர் தெரிவிக்கின்றனர்.
÷திருப்பூர் மாவட்டத்தில் வாகனத் திருட்டு, வாகன ஓட்டுனர்களின் விதிமீறல் போன்றவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இக் குற்றச்செயல்களைத் தடுக்க மாவட்ட காவல்துறை சார்பில் வாகனக் கண்காணிப்பு முறை (விடிஎஸ்) என்ற புதிய மென்பொருள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
÷இதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் வாகனத் தணிக்கையில் ஈடுபடும் போலீஸôர், சந்தேகத்துக்குரிய வாகனத்தின் எண்ணை தங்களது அலைபேசி மூலம் இம்மென்பொருளுக்கு குறுந்தகவலாக அனுப்பினால், ஒருசில விநாடிகளில் அவ் வாகனத்தின் உரிமையாளர், அவ்வாகனம் மீதான வழக்குகள் குறித்த அனைத்து விவரங்களையும் பெற முடியும்.
Related Posts Plugin for WordPress, Blogger...