இது காலம் தளத்தில் நான் படித்தது
கவனக்குறைவாக கணனி பயன்படுத்துவர்களிடமிருந்து இணைய தளவழி மின் அஞ்சல் (web based email) கடவுச் சொல்லை (password) கைப்பற்றுவது சுலபம். இது தொடர்பாக முன்பு எழுதிய இடுகை உடனடிதேவையாக எழுதியது. ஏனென்றால் பல பதிவர்கள் ஜிமெயிலை திறக்கவே அச்சமுற்றனர். அப்படி திறந்தால் எதாவது மின் அஞ்சல் ஆர்குட் தளத்துக்கு அழைக்குமோ என்ற கலவரப்பட்டனர். அதற்கு காரணம் பல வதந்திகள். பிரச்சனைகள் இதுவாக இருக்குமோ ? என்ற ஊகத்தில் எழுதப்பட்டவைகள். அவைகள் பிரச்சனை இருப்பதை மட்டும் பேசின. இங்கே செல்லாதீர்கள் என்று ஒரு குறிப்பிட்ட தள முகவரியை கொடுத்து அதை சொடுக்காதீர்கள் என்று தங்கள் கண்டு கேட்டதில் சற்று தன் கருத்தையும் ஏற்றி வந்த இடுகைகள் ஒரு வித பீதியை ஏற்படுத்தியது. அத்தகைய குழப்பங்களை தவிர்பதற்காக தொழில் நுட்ப ரீதியில் சிலவற்றை விளக்கி எழுதி இருந்தேன். அதன் பிறகு வதந்தீகள் அடங்கியது என்று நண்பர்கள் தெரிவித்தனர். இன்னும் இரண்டு நாள் இதை வைத்து கும்மி அடித்திருக்கலாம் என்று எவரும் நினைத்திருந்தால் அவர்களுக்கு நிச்சயம் என்மீது கோபம் வந்திருக்கும் :) - விடுங்க சார் கும்மி மேட்டருக்கு எப்போதும் பஞ்சமேயில்லை:)
சரி தலைப்புக்கு வருகிறேன். ஆர்குட்டில் நுழைய சொல்லி பாஸ்வேர்டை அபேஸ் செய்வதை விட ப்ளாக்கர் வழியாக அதை செய்வது சுலபம். ஏன் ஆர்குட் போலியாக பயன்படுத்தப்பட்டது ? என்று பார்க்கும் போது ஆர்குட் குழுமங்களின் தாக்கமே காரணம் என்று நம்ப வேண்டி இருக்கிறது. ஏனென்றால் ஆர்குட் குழுமத்தில் பெரும் குழுக்களாக இணைந்து கொண்டு சமுதாய கட்டமைப்பை ஏற்படுத்துகிறார்கள். நம் வலைப்பதிவில் (ப்ளாக்கரில்) குழுப்பதிவுகள் என்பது ஆர்குட் குழுமத்தை ஒப்பிட்டு பார்க்கையில் மிக மிக குறைவு. என்னதான் ப்ளாகர் வழி எழுதினாலும், திரட்டிகளின் சேவையை பயன்படுத்திக் கொள்ளும் போதே எழுத்துக்கள் குறிப்பிட்ட அளவினர் படிக்கின்றனர். 'சூடான தமிழ் செய்திகள்' என்ற பெயரில் வலைப்பதிவு இருந்து அதனை எந்த திரட்டியிலும் இணைக்காமல் இருந்தால், அதில் 'பின் லேடன் பிடிபட்டான்' என்ற செய்தி இருந்தாலும் எவருக்கும் தெரிவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு.

நம்முடைய பதிவுகளை நாம் இதவரை Fecebook-ல் இணைக்க நாம் தான் ஒவ்வொரு பதிவையும் இணைக்க வேண்டும். ஆனால் இனிமேல் அப்படி செய்ய தேவையில்லை. நம்முடைய பிளாக்கை Networked blog என்ற புதிய facebook பகுதியில் இணைத்து விட்டால் போதும் நம்முடைய பதிவுகள் தானாகவே நம்முடைய Facebook-ன் சுவர் பகுதியில் வந்து விடும். இதன் மூலம் நாம் ஒன்றிற்கு மேற்ப்பட்ட பிளாக்குகளை இணைத்து கொள்ளலாம்.