உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..
Showing posts with label கணனி. Show all posts
Showing posts with label கணனி. Show all posts

Friday, November 30, 2012

விலையில்லா மடிக்கணினிக்கு என்ன விலை கொடுக்கிறோம்? கீற்றுவில் - சி.மதிவாணன்

இதுவரை எந்த அரசும் கொண்டுவராத திட்டம் என்று இலவச மடிக் கணிணிகள் திட்டம் பற்றி பலரும் சொல்கிறார்கள். இலவசப் பொருட்களைக் கொடுப்பது அடுத்தத் தேர்தலில் ஜெயிப்பதற்கான வழி என்று இரண்டு திராவிடக் கட்சிகளும் நினைக்கின்றன. அது தவறு என்பதைச் சூடு கண்ட பூனையான கருணாநிதி தெரிந்து வைத்திருக்க வேண்டும். அடுத்த தேர்தலில் ஜெயலலிதா தெரிந்துகொள்வார்.
ஆனால், இலவசப் பொருட்களை வழங்குவது வாக்குகளைப் பெறுவதற்காக என்பது மிகவும் எளிய புரிதல். அதனை ஒரு பொருளாதார நடவடிக்கையாகவும் ஆளுவோர்கள் பயன்படுத்துகிறார்கள். அது ஒரு அரசியல் நடவடிக்கையும் கூட. இங்கே நான் சொல்லும் அரசியல் வாக்குப் பெட்டி அரசியல் அல்ல… அது அதனையும் தாண்டி நீண்ட கால நலனுக்கானது. (யாருடன் நலனுக்கானது என்பது வேறு கதை!)

Tuesday, September 11, 2012

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!

தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை ஓ
ப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.

Sunday, July 22, 2012

இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!!

எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை.

இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும் இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் தான் குறைவாக வேகம் இருக்கும் இந்தப்பிரச்சினையை நீக்கி முழு இண்டர்நெட் வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை இன்று பார்க்கலாம்.


இண்டர்நெட் இணைப்பின் வேகம் நாடுகளுக்கு நாடு வேறுபட்டாலும் ஒரு சில நாடுகளில்இணையத்தின் வேகம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, இதற்காக நாம் பெரிதாக எதுவும் செய்ய வேண்டும் நம் கணினியில் ஒரு சிறிய மாற்றம் செய்து இணையத்தின் முழு வேகத்தையும் எந்தத்தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம்.
சாதாரணமாக அன்லிமிடட் இண்டர்நெட் ( Unlimited Internet) இணைப்பு தான் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் இதில் இணைப்பு வேகம் குறைந்தபட்சமாக ( Limited Speed) இருக்கும் பல மணி நேரம் செலவு செய்துதான் பெரிய அளவிளான கோப்புகளை தறவிரக்க முடியும். இதைத்தவிர்த்து நம் கணினியில் ஒரு சில மாற்றம் செய்வதன் மூலம் முழு இண்டர்நெட் வேகத்தையும் பெறுவது எப்படி என்பதைப்பற்றி பார்க்கலாம்.

விண்டோஸ் எக்ஸ்பி ( Windows Xp ) கணினி வைத்திருப்பர்களுக்கு மட்டுமே இந்த முறை வேலை செய்யும், முதலில் Start Button -ஐ சொடுக்கி Run என்பதை தேர்ந்தெடுத்து சொடுக்க வேண்டும், Run விண்டோவில் gpedit.msc என்று தட்டச்சு செய்த்து Ok பொத்தானை சொடுக்க வேண்டும் அடுத்து வரும் திரையில் இணையத்தின் அபார வளர்ச்சி Computer Configuration என்ற மெனுவிற்கு அடியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் sub menu -வில் Network என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் Sub menu வில் QoS Packet Scheduler என்பதை சொடுக்க வேண்டும். இதில் Limit Reservable Bandwidth என்பதை சொடுக்கி Enabled என்பதை தேர்ந்தெடுத்து அதற்கு அடியில் இருக்க்கும் Band width Limit என்பதில் 4% கொடுத்து Ok பொத்தானை சொடுக்கி சேமித்து வெளியே வரவேண்டியது தான் அடுத்து கணினியை ஒரு முறை restart செய்து பார்த்தால் இணைப்பின் வேகம் முழுமையாக தெரியும்
 
 


நன்றி

Wednesday, July 04, 2012

விண்டோஸ் 8: இன்ஸ்டலேஷன் (Windows 8 - Installation)




1. முதல் படி: முதலில் விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 7 யு.எஸ்.பி./டி.வி.டி. டூலினை தரவிறக்கம் செய்திடவும்.

இதற்கான தளங்களின் முகவரிகள் :
மற்றும்

உங்களுக்கு விண்டோஸ் 8 தொகுப்பின் எந்த வெர்ஷன் (64 பிட் அல்லது 32 பிட்) தரவிறக்கம் செய்திட வேண்டும் என்ற குழப்பம் இருந்தால், உங்கள் கம்ப்யூட்டர் அண்மையில் வாங்கப்பட்டிருந்தால், 64 பிட் பதிப்பினையே செய்திட பரிந்துரைக்கிறேன்.

இரண்டு பிட் பதிப்புகளுக்கிடையே என்ன வேறுபாடு என அறிந்து கொள்ள ஆர்வமும், நேரமும் இருப்பவர்கள்,
http://www.techspot. com/ news/ 35624techtipoftheweekshouldyouinstallwindows732bitor64bit.htmlஎன்ற முகவரியில் உள்ள தளத்தில் தரப்பட்டுள்ள வழி காட்டுதல்களைப் படிக்கலாம்.

வேறுபாடுகளும் புரியும். சுருக்கமாகச் சொல்வதென்றால், விண்டோஸ் 8 சிஸ்டத்தின் 64 பிட் பதிப்பிற்கு, 1 ஜிபி ராம் கூடுதலாகத் தேவைப்படும். ஸ்டோரேஜ் அதற்கென 4 ஜிபி வேண்டும். இது அநேகமாக பலர் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களில் இருக்கும்.


2. இரண்டாம் படி:

பூட் செய்யக்கூடிய விண்டோஸ் 8 யு.எஸ்.பி. ட்ரைவினைத் தயார் செய்திடவும். இதற்கு 4 ஜிபிக்கும் அதிகமான கொள்ளளவு உடைய யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ் ஒன்றினை, கம்ப்யூட்டரில் அதற்கான ட்ரைவில் இணைக்கவும்.

இப்போது தரவிறக்கம் செய்த Windows 7 USB/DVD டூலை இன்ஸ்டால் செய்திடவும். இந்த டூல் செயல்படத் தொடங்கியவுடன், பிரவுஸ் செய்து, உங்களின் யு.எஸ்.பி. ட்ரைவ் மற்றும் நீங்கள் தரவிறக்கம் செய்த விண்டோஸ் 8 ஐ.எஸ்.ஓ. பைலைக் கண்டறிய முடியும்.

இச்செயல்பாட்டின் போது உங்கள் யு.எஸ்.பி. ட்ரைவில் உள்ள அனைத்து பைல்களும் அழிக்கப்படும் என்பதால், முக்கிய அல்லது அனைத்து பைல்களுக்கும் பேக் அப் காப்பி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பேக் அப் காப்பி எடுக்க, உங்கள் யு.எஸ்.பி. ட்ரைவ் வேகத்தைப் பொறுத்து 5 நிமிடங்கள் முதல் 10 நிமிடங்கள் வரை ஆகலாம்.


3.மூன்றாம் படி:

விண்டோஸ் 8 ரிலீஸ் பிரிவியூ இன்ஸ்டால் செய்திடலாம். இதற்கான கீ (key: TK8TP9JN 6P7X7 WWRFFTVB7QPF) உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பைல்களில் தேவையானதை, அல்லது அனைத்தையும் பேக் அப் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. இந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையினை நீங்கள் ஏற்கனவே எடுத்திருப்பீர்கள் என எண்ணுகிறேன்.

உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா அல்லது விண்டோஸ் 7 சிஸ்டத்தின் மீதே நீங்கள் மீண்டும் சிஸ்டம் அமைப்பதாக இருந்தாலோ, அல்லது அப்கிரேட் செய்வதாக இருந்தாலோ, உங்கள் யு.எஸ்.பி. ட்ரைவின் ரூட் டைரக்டரியைத் திறந்து, அதில் உள்ள Setup.exe பைலை இயக்கவும்.

இதில், விண்டோஸ் 7 பயனாளர்கள், எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல், அப்கிரேட் செய்யப்படுவதனை உணர்வீர்கள். ஏனென்றால், புரோகிராம்கள், விண்டோஸ் செட்டிங்ஸ், யூசர் அக்கவுண்ட்ஸ் மற்றும் பைல்கள் அனைத்தும் இம்போர்ட் செய்யப்படும். ஆனால், விண்டோஸ் 8, விஸ்டாவிலிருந்து புரோகிராம்களை சேவ் செய்திடாது. அதே போல விண்டோஸ் எக்ஸ்பியிலிருந்தும் புரோகிராம்கள் சேவ் செய்யப்பட மாட்டாது.

உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கிக் கொண்டிருக்கும் சிஸ்டத்துடன், விண்டோஸ் 8 சிஸ்டத்தினை டூயல் பூட் ஆக அமைக்க திட்டமிட்டால், நீங்கள் இன்னொரு ஸ்டோரேஜ் சாதனத்தினை இன்ஸ்டால் செய்திட வேண்டும்; அல்லது புதிய பார்ட்டிஷன் ஒன்றை உருவாக்க வேண்டும். புதிய பார்ட்டிஷனை உருவாக்க சற்று கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.

விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டம் இயக்குபவர்களுக்கு இது எளிதாக இருக்கலாம். இந்த சிஸ்டத்தில் உள்ள Windows’ Disk Management application என்ற (Start > search for Disk Management) அப்ளிகேஷனைப் பயன்படுத்தலாம். இந்த அப்ளிகேஷன் லோட் ஆனவுடன், உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ட்ரைவினைக் காணலாம். கீழ்க்காணும் முறையில் செயல்படவும்:

* எந்த ட்ரைவில் விண்டோஸ் 8 அமைக்க விரும்புகிறீர்களோ, அதில் ரைட் கிளிக் செய்திடவும். இங்கு “Shrink Volume” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். (விண்டோஸ் 8 சிஸ்டத்தின் 64 பிட் பதிப்பிற்குக் குறைந்தது 20 ஜிபி இடம் தேவைப்படும் என்பதால், அதற்கேற்ப ட்ரைவ் தேர்ந்தெடுக்கவும்.)
* தொடர்ந்து, “Unallocated” என்பதில் ரைட் கிளிக் செய்திடவும். இங்கு “New Simple Volume” என்று ஒன்றை உருவாக்கவும்.

* இவ்வகையில் கிடைக்கும் ட்ரைவ் எழுத்தைத் தேர்ந்தெடுத்து, அதனை quick format முறையில் பார்ட்டிஷன் செய்திடவும். இதனை NTFS பார்மட் பைல் வகையில் பார்ட்டிஷன் செய்வது அவசியம்.

இந்த ட்ரைவ் வால்யூமிற்கு ஏதேனும் ஒரு பெயர் கொடுக்கலாம். விண்டோஸ் 8 எனப் பெயர் கொடுப்பது, நமக்கு அதனை எளிதாக அடையாளம் காட்டும். விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்கள், Partition Logic போன்ற ஏதேனும் ஒரு தர்ட் பார்ட்டி டூல் மூலம், ட்ரைவ் பார்ட்டிஷன் செய்வது நல்லது. இந்த வழியிலும் மேலே கூறப்பட்ட அதே வழிகளையே பின்பற்ற வேண்டியதிருக்கும்.

ஒரு வால்யூம் ட்ரைவினைச் சுருக்கி, இன்னொன்றை உருவாக்க வேண்டும். இவ்வாறு உருவாக்கிய பின்னர், மைக்ரோசாப்ட் இன்ஸ்டலேஷன் புரோகிராம் உங்களை எளிதாக வழி நடத்தும். விண்டோஸ் 8 யு.எஸ்.பி. ட்ரைவினை இயக்கி, custom installation என்பதனைத் தேந்தெடுக்கவும். புதியதாய் நீங்கள் உருவாக்கிய பார்ட்டிஷனைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் யு.எஸ்.பி. ட்ரைவினை இயக்குவதில் சிக்கல் இருந்தால், பயாஸ் செட் அப்பில், உங்கள் சிஸ்டம் ட்ரைவிற்கு முன்னால், யு.எஸ்.பி. ட்ரைவினை அமைக்க வேண்டியதிருக்கும். பூட் ஆப்ஷன்ஸ் பகுதியில் இதனை அமைக்கலாம். சரி, விண்டோஸ் 8 சிஸ்டம் அமைத்த பின்னர், அது தேவை இல்லை என நீங்கள் எண்ணினால், நீக்குவதும் எளிதாக அமையும்.

உங்களுடைய முதன்மை ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் நுழைந்து, பார்ட்டிஷன் சாப்ட்வேர் புரோகிராமினை இயக்கவும். விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்கள் Disk Management இயக்க வேண்டும். பின்னர், விண்டோஸ் 8 வால்யூமினை டெலீட் செய்திடுங்கள்.

மீதமுள்ள பகுதியை நீக்கிய இந்த பகுதியின் நீட்சியாக மாற்றவும். விண்டோஸ் 8 நீக்கப்பட்டதால், உங்கள் பூட் லோடர் பிரச்னைகுள்ளாகி, ஒரிஜினல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குவதில் சற்றே சிக்கல் ஏற்படலாம். கவலையே பட வேண்டாம். இது சின்ன பிரச்னைதான். விண்டோஸ் விஸ்டா மற்றும் 7 பயன்படுத்துபவர்கள், ஆட்டோமேடிக் ஸ்டார்ட் அப் ரிப்பேர் டூலைப் பயன்படுத்தி சரி செய்துவிடலாம்.

விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்கள் தான் சற்று கூடுதல் சிரமத்தை எதிர் கொள்ள வேண்டியதிருக்கும். சுற்றி வளைத்து விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தினையே மீண்டும் பதிய வேண்டியதிருக்கலாம். இவர்கள் விளக்கமான நடைமுறைக்கு http://www. techspot.com /guides/144removingwindows7/page2.html என்ற முகவரியில் உள்ள தளத்தில் காட்டப்பட்டுள்ள வழிமுறையினைப் பின்பற்றலாம்.

Friday, June 22, 2012

Computer Start செய்யும் போது பிரச்சனையா ?

உங்கள் கம்ப்யூட்டர்  இயங்க  தொடங்குகையில் ஏதேனும் புதிய பிரச்னை ஏற்படுகிறதா? வழக்கத்தைக் காட்டிலும் தாமதாகத் தயாராகிறதா? இது உங்கள் கம்ப்யூட்டர் தொடங்குகையில் ஸ்டார்ட் அப் மூலம் தயார் நிலையில் வைக்கும் புரோகிராம்களினால் ஏற்படுவது. உங்களை அறியாமல் இன்ஸ்டால் செய்திடும் புரோகிராம்கள் பல தொடக்கத்திலேயே தயாராகும்படி அமைக்கப்பட்டிருக்கலாம். அத்தகைய புரோகிராம்கள் இப்போது உங்களுக்கு தேவையில்லாமல் இருக்கலாம்.


எனவே உங்களுக்கு எந்த புரோகிராம்கள் தேவை என்று பார்த்து அவற்றை மட்டும் இயங்கும்படி செலக்டிவ் ஸ்டார்ட் அப் தயார் செய்திடலாம். அதற்கான வழியினை விண்டோஸ் தருகிறது. அதனை இங்கு காண்போம்

start up slow for your pc

Sunday, February 19, 2012

Pendriveய் Ramஆக பயன்படுத்தலாம்!


உங்கள் Ram அளவு குறைவாக உள்ளதா? வேகம் குறைவாக உள்ளது என்று கவலை படுகிறீர்களா? இனி இந்த கவலை வேண்டாம் உங்கள் Pendriveய் Ramஆக  செயல்பட இந்த EBooster மென்பொருமென்பொருள் உங்களுக்கு உதவுகிறது.

It speeds up your PC and improves application responsiveness by using flash memory and free RAM as an extra layer of performance-boosting cache for your PC. Use up to four inexpensive flash devices to speed up your system. Add more speed to your PC without any hardware upgrade!
Highlights

உங்கள் கணினியின் மெமரி காலியாகிறதா?


கம்ப்யூட்டர் பயன்பாட்டில் அதன் மெமரி எந்த அளவிற்கு காலியாகிறது என்பதைப் பொறுத்தே அதன் வேகம் அமையும். அதிகமான இடத்தைப் பிடிக்கும் புரோகிராம்களை இயக்க நிலையில் வைத்திருந்தால், அடுத்து அடுத்து நாம் இயக்க எடுக்கும் புரோகிராம்களுக்கு இடம் இல்லாமல், கம்ப்யூட்டர் திணற ஆரம்பிக்கும்.

அல்லது திடீரென கிராஷ் ஆகி நிற்கும். இந்த பிரச்னையை எதிர்கொள்ளாமல் இருக்க வேண்டுமானால், நம் கம்ப்யூட்டரின் மெமரி எந்த அளவில் பயன்பட்டு வருகிறது என்பதை அறிவது நல்லது. இதனை அறிய பல புரோகிராம்கள் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

Thursday, February 09, 2012

பிராண்டட் கம்ப்யூட்டர் மற்றும் அசெம்பிள் கம்ப்யூட்டர் இதை பத்தி கொஞ்சம் தெரிஞ்சிக்கலாம் வாங்க…

பொதுவாக நாம் கம்ப்யூட்டர் வாங்க நினைக்கும்போது சிலர் நமக்கு அட்வைஸ் செய்வது என்ன ? வாங்குவது வாங்குகிறீர்கள் நல்ல பிராண்டட் கம்ப்யூட்டராக பார்த்து வாங்கிவிடுங்கள் அதுதான் நல்லது என்று சொல்வார்கள். அவர்கள் சொல்வது சரிதான். ஆனால் அப்படி சொல்லும் சிலரிடம் பிராண்டட் கம்ப்யூட்டருக்கும் அசெம்பிள் ( நாமே பாகங்களை வாங்கி செட்டப் செய்யும்) கம்ப்யூட்டருக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டால் அவர்களால் அதற்க்கு சரியான விளக்கம் கொடுக்க முடியாது.
பிராண்டட் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தும் Geniun Intel Mother Board, Intel Processor, RAM, Hard Disk, DVD Drive போன்ற நல்ல பிராண்டட் பாகங்களை நாமும் வாங்கி அதனை நாமே அசெம்பிள் செய்தும் பயன்படுத்தலாம். அப்படி என்றால் பிராண்டட் கம்ப்யூட்டருக்கென்று சிறப்பு என்ன இருக்கிறது ?
அதனை பற்றி கொஞ்சம் பார்ப்போம்….
கம்ப்யூட்டரை நாம் பெர்சனல் கம்ப்யூட்டர் அல்லது டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் ( PERSONAL COMPUTER (PC) or DESK TOP COMPUTER ) என்று எப்படி வேண்டுமானாலும் பெயர் சொல்லி அழைக்கலாம்.

Hard Disk ஐ Format செய்யாமல் புதிய Partition உருவாக்குவது எப்படி?

கணனியை Format  செய்யாமல் Partition களை  உருவாக்குவது சாத்தியமா? சில சந்தர்ப்பங்களில் கணனி வன்தட்டில் மேலதிக பிரிவுகளை உருவாக்க வேண்டிய தேவை ஏற்படலாம். அவ்வாறான சந்தர்ப்பங்களில் நீங்கள் எந்த முடிவை எடுப்பீர்கள்?  Format  செய்து பின்  hard disk கினை தேவையான partition களாக பிரிப்பது என்ற முடிவையே பலரும் எடுக்கின்றனர். நான் அதைபற்றி பகிர வரவில்லை.


இதற்க்கு வேறான மென்பொருட்களும் அவசியமில்லை. மேலும் அத்தியவசிய கோப்பிகள், உறைகளை வேறு இயக்கிகளுக்கு (separate drives) மாற்ற அல்லது பிரதி  செய்து (copy) கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை.
கீழ் வரும் படிமுறைகளை பின்பற்றி புதிய  Partition ஒன்றை  SYSTEM DRIVE இல் உருவாக்கிக் கொள்ளலாம்.

Wednesday, February 08, 2012

2012ல் லினக்ஸ் பயன்பாடு


சென்ற ஆண்டு பெர்சனல் டெஸ்க் டாப் கம்ப்யூட்டருக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டம் பிரிவில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதில் இயங்கும் அனைத்து நிறுவனங்களும் கொண்டு வந்த மாற்றங்கள், அறிவித்த புதிய திட்டங்கள் மக்களிடையே நிறைய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தின.

குறிப்பாகச் சொல்வ தென்றால், மொபைல் சாதனங்களுக்கென வடிவமைக்கப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டங்களின் சிறப்புகளை, பெர்சனல் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் கொண்டு வர பல நிறுவனங்கள் முயற்சி செய்து வெற்றியும் பெற்றன.

இதனைக் கண்ட மக்கள், கிடைக்கும் சிஸ்டத்திற்கு நாம் வளைந்து கொடுக்காமல், நாம் விரும்பும் வகையில் செயல்படக் கூடிய சிஸ்டம் இருக்குமா என்று தேடத் தொடங்கினார்கள். அவர்களுக்கு லினக்ஸ் கை கொடுத்தது. இந்த ஆண்டில் லினக்ஸ் சிஸ்டம் நிச்சயம் இன்னும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம். இதற்கான காரணங்களை இங்கு காணலாம்.

Saturday, February 04, 2012

கம்பியூட்டரை சுத்தம் செய்ய இலவச மென்பொருள்



உங்கள் கணினியில் Temporary File ( தற்காலிக கோப்பு), Fragmentation (கோப்புகள் துண்டாகுதல்) மற்றும் Registry பிழைகளும் சேர்ந்து கணினியை மெதுவாக்கவோ அல்லது சில நேரங்களில் இயங்க விடாமலும் செய்யலாம்.கணினியில் நீங்கள் வேலை செய்யும் நேரத்தைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட இடைவேளைகளில் இந்த மாதிரி பயன்பாட்டு மேன்தொகுப்புகளை (Utility software) கொண்டு சுத்தம் செய்வது நன்று.
உங்கள் கணினியில் Temporary File ( தற்காலிக கோப்பு), Fragmentation (கோப்புகள் துண்டாகுதல்) மற்றும் Registry பிழைகளும் சேர்ந்து கணினியை மெதுவாக்கவோ அல்லது சில நேரங்களில் இயங்க விடாமலும் செய்யலாம்.கணினியில் நீங்கள் வேலை செய்யும் நேரத்தைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட இடைவேளைகளில் இந்த மாதிரி பயன்பாட்டு மேன்தொகுப்புகளை (Utility software) கொண்டு சுத்தம் செய்வது நன்று.

Tuesday, January 31, 2012

கணிணி திடீரென முடங்கிப் போவதினை தடுக்கும் மென்பொருள்



விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், பல வேளைகளில் புரோகிராம்கள் திடீரென முடங்கிப் போகும். எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புகள் அப்படியே உறைந்து நிற்கும். பிரவுசர்கள் முடங்கிப் போகும். இவற்றை மூட முயன்றால், Not responding என்ற பிழைச் செய்தி கிடைக்கும். பின்னர் Ctrl+Alt+Del கீகளை அழுத்தி Windows Task Manager பெற்று இவற்றை மூட முயற்சிப்போம். சில வேளைகளில், இந்த வழியும் நமக்குக் கை கொடுக்காமல், பிரச்னைகளைத் தரும். இறுதியாக, ரீபூட் பட்டனை
அழுத்தி விண்டோஸ் சிஸ்டத்தினை மறுபடியும் இயக்குவோம்.

Sunday, January 29, 2012

பைல்களைச் சுருக்க இலவச புரோகிராம்கள்



Print
ஹார்ட் டிஸ்க் இடம் கருதியும், எளிதாகப் பதிந்து எடுத்துச் செல்லவும், இணைய வழி பரிமாறிக் கொள்ளவும் நாம் பைல்களைச் சுருக்கி அமைக்கும் வழியை மேற்கொள்கிறோம். இந்த வகையில் பலரும் பயன்படுத்துவது விண்ஸிப் புரோகிராம்.

ஆனாலும் இணையத்தில் விண்ஸிப் போல பல இலவச புரோகிராம்கள் நமக்குக் கிடைக்கின்றன. அவற்றை இங்கு பார்க்கலாம்.

பைல்களைச் சுருக்கி அமைப்பதில் Zip துணைப் பெயர் கொண்டு அமைக்கப்படும் பைல்களே அதிகம். இது 1989 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.

Saturday, January 28, 2012

உடனே சீ.டி கேசட்களை நம் கம்ப்யூட்டரில் காப்பி செய்ய ?

நாம் பொதுவாக டிவிடி படங்களை நம்முடைய கணணியில் உள்ள டிவிடி டிரைவ்களில் போட்டு பார்ப்பது பழக்கம்.

நாம் நண்பர்களிடம் இருந்தோ அல்லது வேறுயாரிடமாவது இருந்தோ படங்களை வாங்கி உடனே பார்த்து விட்டு தருவதற்கு முடியவில்லை என்றால் நாம் படங்களை கொப்பி செய்து அதனை நம் கணணியில் சேமிப்போம். அவ்வாறு சேமித்த படங்களை டிவிடி டிரைவில் போட்டு பார்ப்பது போன்றே சௌகரியமாக பார்ப்பது என்பது இயலாது.
ஒவ்வொரு கோப்பையும் நாம் வீடியோ ப்ளேயரில் திறக்க வேண்டும். அதில் பலவிதமான கோப்புகள் இருக்கும். நாம் ஒவ்வொன்றாக திறந்து நாம் பார்க்க வேண்டிய அந்த படத்தை பார்ப்பதற்குள் நேரம் ஆகிவிடும். சில கோப்புகள் ஒழுங்காக கொப்பி ஆகியிருக்காது.

Damage CD-பழுதான சிடியிலிருந்து தகவல்களை பெற.


நாம் காப்பி செய்யும் சிடிகளில் அந்த சிடியில் உள்ள தகவல்களை எழுதிவைப்போம். சில சமயம் எழுத மறந்துவிடுவோம்.சில நாட்கள் கழித்து சிடியை எடுத்து பார்க்கும் சமயம் டேமேஜ் (Damage) ஆகியிருக்கும்.

எதில்போட்டாலும் சிடி ஓப்பன் ஆகாது. அதில் என்ன தகவல் உள்ளது என்பதும் நமக்கு தெரியாது. அந்த சிடியை வைத்துக்கொள்வதாக இல்லை குப்பையில் போட்டுவிடுவதா என குழப்பமாகும். குப்பையில போடும் முன்பு அதை செக்செய்து போடுவது நல்லது. சிலசமயம் அதில முக்கியமான தகவல்கள் இருக்க்கூடும். அதை சிடி டிரைவில போட்டால் ஒப்பன் ஆகாது.

அந்த மாதிரியான சமயத்தில் நமக்கு கை கொடுக்க வருவது இந்த சாப்ட்வேர். உயிருக்கு போராடுபவருக்கு பெரிய டாக்டர் கடைசியாக முயற்சிசெய்வதில்லையா. அதுபோல் இந்த சாப்ட்வேர் மூலம் கடைசியாக முயற்சிசெய்து இதில உள்ள தகவல்களை மீட்டு எடுக்கலாம்.

Thursday, January 26, 2012

Pdf கோப்புக்களை Doc ஆக மாற்ற சிறந்த 5 தளங்கள்

THANKS TO  Kanani Ulakam
கணணி உலகமானது இன்று “Cloud Computing” என்ற ஓன்லைன் முறையை நோக்கி நகர்ந்து வருகின்றது.
இதனால் மென்பொருட்களை கணணியில் நிறுவி செய்யப்பட்ட வேலைகள் அனைத்தையும் இன்று ஓன்லைனில் செய்யும் வசதி கிடைத்துள்ளது.
அதற்கிணங்க Pdf கோப்புக்களை Doc கோப்புக்களாக மாற்றுவதற்கும் நாம் ஓன்லைன் தளங்களை பயன்படுத்த முடியும்.

Sunday, January 22, 2012

சாப்ட்வேர் இல்லாமல் ஸ்கிரீன்ஷாட் எடுப்பது எப்படி? [screenshots]

எந்த ஒரு மென்பொருள் [சாப்ட்வேர் ] தரவிறக்கமும் செய்யாமல் எளிதாக நம்  தட்டச்சுப் பகையைப்  பயன்படுத்தி  ஸ்கிரீன்ஷாட்  எடுக்கலாம்.
நம்   மானிட்டரில் தெரியும் வலைப் பக்கத்தைக் காட்டவோ அல்லது செயல்முறை விளக்கத்தைச் சொல்லவோ சின்னச் சின்ன ஸ்கிரீன்ஷாட்டுகளைப் பயன்படுத்துவோம்.
இதற்கு சிறிய அளவிலான நிறைய மென்பொருட்கள் இணையத்தில் உள்ளன.அவற்றைத் தரவிறக்கம் செய்து நம் கணிணியில் சேமித்து வைத்துப் பயன் படுத்துவோம்.

 அதற்கு வேலையே இல்லாமல் ஒரு எளிய முறையில் நம் கீபோர்டு [தட்டச்சு/ விசைப்பலகை] கீ பயன்படுத்தியே ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியும்.
நம் கீ போர்டில் மெயின் பகுதிக்குக் கீழாக F12 கீ க்கு கீழாக ஒரு கீ Printscrc/sysRq
என இருக்கும் பாருங்கள். அதுதான் கணிணித் திரையில் தெரியும் பக்கத்தை ஸ்கிரீன்ஷாட் எடுக்கப் பயன்படுகிறது.

Saturday, January 21, 2012

கம்ப்யூட்டரின் அடிப்படை விசயங்களை தெரிந்துகொள்ளுங்கள்....






நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !

நாம் அன்றாடம் கம்ப்யூட்டரை பயன்படுத்திக்கொண்டிருப்போம். ஆனால் நமக்கு இன்னமும் கம்ப்யூட்டரின் அடிப்படை விசயங்களில் சில சந்தேகங்கள் இருக்கத்தான் செய்யும். அதனை மற்றவரிடம் போய் கேட்பது நமக்கே கஷ்டமான விசயம். ஏனென்றால் ஒருவரிடம் இதை போய் கேட்டால் இவ்வளவு நாளாக நீங்கள் கம்ப்யூட்டர் பயன்படுத்துகிறீர்கள் உங்களுக்கு இது கூட தெரியாத என அவர் கேட்டுவிடுவாரே என்றுதான்.....

சரி... இனி அந்த கவலை உங்களுக்கு வேண்டாம்...

கம்ப்யூட்டரின் அடிப்படை விசயங்கள் உங்களுக்கு தெரிந்தவை தெரியாதவை எதுவானாலும் சரி இந்த பதிவின் மூலம் நாம் பகிர்ந்துகொள்வோம்..

Friday, January 20, 2012

உங்கள் கணினியின் உள்ள மென்பொருட்களின் சீரியல் எண்களை அறிய ஒரு சூப்பரான மென்பொருள்

நாம் கணினியில் பல கட்டண மென்பொருட்களை நிறுவி இருப்போம். உதாரணமாக OS, மைக்ரோசாப்ட் ஆபிஸ்,போட்டோசாப் போன்ற மென்பொருட்களை நம்முடைய கணினியில் கட்டாயம் நிறுவி இருப்போம். அதை நிறுவும் பொழுது அதற்க்கான சீரியல் எண்களை கொடுத்து install  செய்து இருப்போம். ஆனால் அந்த சீரியல் எண்களை இப்பொழுது நம்மால் பார்க்க முடியாது. ஒருவேளை அந்த சீரியல் எண்களை நாம் குறித்து வைக்காமல் இருந்தால் கணினியில் ஏதேனும் பழுது ஏற்ப்பட்டால் திரும்பவும் நிறுவ அந்த சீரியல் எண் மிகவும் அவசியம். இது போன்ற சூழ்நிலையில் நமக்கு உதவத்தான் இந்த சூப்பரான மென்பொருள் உள்ளது.
  • இந்த மென்பொருளை download செய்து கொள்ளவும். இதை install  செய்ய வேண்டியதில்லை நேரடியாக இயக்கலாம்.

இரண்டு கணனிகளுக்கிடையில் பைல்களைப் பரிமாற

இரண்டு கணனிகளுக்கிடையில் எவ்வாறு பைல்களைப் பரிமாறலாம்?” என்பது பற்றி இப்போது பார்ப்போம். இங்கு சொல்லப்படும் முறை மூலம் பைல்களைப் பரிமாற மட்டுமே முடியுமே தவிர இரண்டு கணனிகளுக்கிடையில் இணைய இணைப்புகளை இணைக்கும் முறையல்ல. இரண்டு கணிணிகளுக்கிடையில் பைல்களைப் பரிமாற, அடிப்படை தேவைகள் சில உண்டு.
முதலாவது, இரண்டு கணனிகளிலும் Network Card இருக்க வேண்டும். மற்றையது, இரண்டு கணனிகளும் இயக்க நிலையிலேயே இருக்க வேண்டும்.
இரண்டு கணணிகளுக்கிடையில் Hub , Switch போன்ற இணைய சாதனங்கள் இல்லாமல் Network card ஊடாக இரண்டு கணனிகளை இணைக்க cross-over கேபில் பயன் படுத்தப்படுகிறது. இந்த cross-over கேபில் (கீழேயுள்ள படத்தைப் பார்க்க) வழமையான Ethernet கேபிலிலிருந்து வேறுபட்டது.

Related Posts Plugin for WordPress, Blogger...