இது சாதாரண விஷயம் கிடையாது. அனைத்து எதிர்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது என்று ஊடகங்கள் தெரிவித்து வருகின்றது. மத்தியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சியான மம்தா பானர்ஜி கூட கூட்டணியில் இருந்தாலும் கூட இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றார்.
அது மட்டுமல்லாமல் தேவைப்பட்டால் கூட்டணியில் இருந்து விலகுவோம்
என்று பகீரங்கமாகவே தெரிவிக்கின்றார். அந்த முடிவினை தமிழ் நாட்டு மக்களுக்காக கருணாநிதி இதுவரை ஏன் எடுக்க முன்வரவில்லை என்றும் தெரியவில்லை??
கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூடுதலாய் மூன்று தொகுதிகள் கேட்டதற்காக கூட்டணியை முறித்துக் கொள்வோம் என்று சொன்னவர்
இன்று தமிழ் நாட்டு மக்களின் மீது தொடர்ந்து சுமைகளை தூக்கி போடும் காங்கிரஸ் கூட்டணியில்
இருந்து விலக மறுப்பதன் பின்னணி என்ன?






















