கடந்த பதிவில் கூகிளின் புதிய தோற்றம் - New Google Bar பற்றி பகிர்ந்தேன் அல்லவா? இன்னும் அந்த தோற்றம் (என்னையும் சேர்த்து) பலருக்கு வரவில்லை. அதனை உடனடியாக பெறுவது எப்படி? என்று இங்கு பார்ப்போம்.
இதனைப் பெற கூகிள் க்ரோம் (Google Chrome) உலவியை பயன்படுத்த வேண்டும்.
1. கூகிள் க்ரோம் உலவியில் திறந்து, இங்கே க்ளிக் செய்து "Edit This Cookie" என்னும் நீட்சியை நிறுவிக் கொள்ளுங்கள்.
2. பிறகு Google.com தளத்திற்கு செல்லுங்கள். அங்கு Rigt Click செய்து Edit Cookies என்பதை கிளிக் செய்யுங்கள்.
3. பிறகு வரும் பக்கத்தில் PREF என்பதை கிளிக் செய்து, அங்கு Value என்ற இடத்தில் பின்வருபவற்றை பேஸ்ட் செய்யுங்கள்.
ID=03fd476a699d6487:U=88e8716486ff1e5d:FF=0:LD=en:CR=2:TM=1322688084:
LM=1322688085:S=McEsyvcXKMiVfGds
அவ்வாறு கொடுத்தப் பின் கீழே Submit Cookie Changes என்பதை கிளிக் செய்யுங்கள்.
4. இப்பொழுது மீண்டும் Google.com தளத்திற்கு சென்றால் புதிய Google Barஇருக்கும்.
இதில் More என்பதை கிளிக் செய்தால் மேலும் பல தளங்களின் பட்டியலைக் காட்டும்.
ஜிமெயில் தளத்திலும் இந்த புதிய மாற்றங்கள் இருக்கும்.
இதனை பெற்ற பிறகு நாம் நிறுவிய "Edit This Cookies" நீட்சியை நீக்கிவிடலாம். உலவியின் மேலே வலதுபுறம் உள்ள Cookies படத்தில் Right Click செய்து, Uninstall என்பதை கிளிக் செய்தால் அந்த நீட்சி நீங்கிவிடும்.
கவனிக்க: க்ரோமில் இந்த வசதியை பெற்று பிறகு மற்ற உலவிகளைப் பயன்படுத்தினால் பழையபடி தான் இருக்கும். க்ரோம் உலவியில் மட்டும் தான் இதனை பெற முடியும்.
நன்றி: Maximilian Majewski







No comments:
Post a Comment