இந்திய ரயில்வேயின் மெக்கானிக்கல் பிரிவில் சேர்ந்து பயிற்சி பெற்று பின்னர் பணியில் சேருவதற்காக நடத்தப்படும் Special Class Railway Apprentices Examination – 2013 தேர்வெழுத தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது: 17 வயது நிரம்பியர்களாகவும் 21 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: +2 வில் (இயற்பியல், வேதியியல், கணிதம்) போன்ற பாடப்பிரிவுகளை கொண்டதாக இருக்க வேண்டும். பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ100 வரைவோலை எடுக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி., பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: http://upsconline.nic. in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வு முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மெக்கானிக்கல் பயிற்சியளிக்கப்படும். பயிற்சின் போது முதல் 2 வருடங்களுக்கு ரூ.9100 உதவித்தொகையும், மூன்றாம் ஆண்டு மற்றும் நான்காம் ஆண்டில் ரூ.9400ம், கடைசி ஆறு மாதங்கள் 9700ம் உதவித்தொகை வழங்கப்படும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நவம்பர் 12 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விரிவான தகவல்களுக்கு http://upsconline.nic.in/ என்ற இணையதளத்தை பார்க்கலாம்.