நாம் பணி நிமித்தமாக இருக்கும் பொழுது, இணையத்தில் ஏதாவது பயனுள்ள வலைப்பூக்களை பார்த்து, ’அட நல்ல விஷயமாக இருக்கிறதே! அவசியம் பிறகு சமயம் கிட்டும் பொழுது படிக்க வேண்டும்’ என பல சமயங்களில் யோசித்ததுண்டு, ஆனால் சமயம் கிட்டும் பொழுது அந்த வலைப்பூ முகவரியை மறந்து போய் விடுவதும் நிகழ்கிறது.
இந்த பணியை எளிதாக்க கூகுள் க்ரோம் (Google Chrome) உலாவியில் பயன்படுத்தும்படியான ஒரு உபயோகமான நீட்சி Local Read Later ஆகும். (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)
Install பொத்தானை அழுத்தி க்ரோம் உலாவியில் பதிந்து கொள்ளுங்கள்.
இந்த நீட்சியை பதிந்து கொண்ட பிறகு, Toolbar button ஒன்று உருவாகியிருப்பதை கவனிக்கலாம்.
இந்த ஐகானை வலது க்ளிக் செய்து Options பகுதிக்கு செல்லுங்கள்.
இங்கு, ஷார்ட் கட் கீயை உங்கள் வசதிக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம்.
மேலும், Check if you want to delete the page after you click it for read. எனும் வசதியை தேர்வு செய்வதன் மூலமாக, நீங்கள் பிறகு படிக்கலாம் என்று குறித்து வைத்திருந்த வலைப்பக்கத்தை சமயம் கிட்டும் பொழுது படித்த பிறகு, அது தானாகவே பட்டியலிலிருந்து நீக்கப்படும்.
தேவையான வலைப்பக்கத்தை காணும் பொழுது Ctrl+Alt+R கீகளை ஒரு சேர அழுத்தும் பொழுது, அந்த பக்கங்கள் Local Read Later இல் இணைக்கப்படுவதை, அதன் ஐகானில் தெரியும் எண்ணிக்கைகளை வைத்து உறுதி படுத்திக் கொள்ளலாம். (உதாரணமாக 2)
இப்படியாக Read Later இல் தொகுத்து வைத்துள்ள வலைப்பக்கங்களை பார்வையிட, அந்த ஐகானை க்ளிக் செய்து அதில் தேவையான வலைபக்கத்தை க்ளிக் செய்து பார்வையிடலாம்.
குறித்து வைத்த வலைப்பக்கங்களை படித்த பின்னர், அந்த பக்கங்கள், பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு, எண்ணிக்கை குறைவதை கவனிக்கலாம்.








No comments:
Post a Comment