நாம் வாங்கும் நிலத்தை பத்திரப் பதிவுத் துறையின் மூலம் பதிவு செய்யும்போதே, பட்டா மாறுதலுக்கான மனுவும் சேர்த்தே சமர்ப்பிக்கிறோம்.
பதிவுத் துறையின் மூலமாகவே, நமது 'பட்டா மாறுதல் மனு' வருவாய்த் துறையினருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அதன்படி, வருவாய்த் துறையினர் இயல்பாகவே, நாம் வாங்கிய நிலத்துக்கான பட்டாவில் பெயர் மாறுதல் செய்து, நமக்குத் தர வேண்டும்.
அரசாணை வெளியிடப்பட்ட ஆண்டு 1984. ஆனால், நடைமுறை அப்படியா இருக்கிறது? இல்லவே இல்லை!
நிலத்தைப் பதிவு செய்துவிட்டு, 'பட்டா பெயர் மாறுதலுக்காக' வி.ஏ.ஓ., -விடம் போகிறோம்.
