Monday, December 31, 2012
இந்தியன் குரல்: NEW RULES TO RTI ACT., 2005
இந்தியன் குரல்: NEW RULES TO RTI ACT., 2005: தகவல் பெரும் உரிமைச் சட்டம் 2005 இல் 2012-ம் ஆண்டின் புதிய விதிமுறைகள் தகவல் உரிமைச் சட்ட உபயோகிப்பாளர்களே இந்த இணைப்பை அல்லது தகவலை அ...
|
|
Friday, December 28, 2012
நேரடி மானியம் - Direct Cash Transfer - ஜாக்கிரதை மக்களே!
இதுவரை
கேஸ் சிலிண்டர்களின் அசல் விலை 900 சொச்சம் ரூபாய். ஆனால் மத்திய அரசு மானிய விலையில் (Subsidy) நமக்கு 450 சொச்ச ரூபாய்க்கு தருகிறது. மீதி பணத்தை சிலிண்டர் சப்ளை செய்யும் நிறுவனங்களுக்கு தந்துவிடுகிறது.
இனி
நாம் கேஸ் சிலிண்டர்களை முழு விலையான 900 கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும். மீதி மானிய பணத்தை அரசு நமது பாங்க் அக்கவுண்டில் போட்டுவிடும்.
தற்போது இந்த திட்டம் நடைமுறையில் உள்ளதா?
சோதனை முறையில் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், பாண்டிச்சேரி மற்றும் சிக்கிம் மாநிலங்களில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. பென்ஷன், பி.எஃப் உள்ளிட்டவை கூட இத்திட்டத்தில் இருப்பதால் மக்கள் இதை வரவேற்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் என்ன இலாபம்?
ரேஷன் அரிசி, சர்க்கரை, கெரஸின் உள்ளிட்டவையும் இந்த திட்டத்தின் கீழ் வருவதால், ரேஷன் அரிசி இனி மானிய விலையில் கிடைக்காது. எனவே ரேஷன் பொருட்களின் கடத்தல் நீங்கும். போலி ரேஷன் பெறுநர்களுக்கு இடமிருக்காது. மக்கள் கையில் பணப்புழக்கம் அதிகரிப்பதால் பதவியில் இருப்பவர்களின் ஓட்டு வங்கி காப்பாற்றப்படுகிறது.
யார் யாரெல்லாம் இந்த திட்டத்தை அனுபவிக்க முடியும்?
மத்திய அரசு வழங்கி வரும் ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே இதனை பெற முடியும். எனவே இந்தியர்கள் அனைவரும் ஆதார் அட்டை வாங்க வேண்டிய கட்டாயம் வரும். ஒவ்வொரு குடும்பத்தலைவரும் பரம ஏழையாக இருந்தாலும் கட்டாயம் வங்கிக் கணக்கு துவங்கினால் மட்டுமே மானியம் கிடைக்கும்.
இதனால் என்ன நஷ்டம்?
அரசாங்கத்துக்கு இதனால் பெரிய நஷ்டம் ஏதுமில்லை. ஆனால் மக்கள் பாடு திண்டாட்டமாக பெருமளவு வாய்ப்பு உள்ளது. முதலாவதாக மக்கள் கையில் பணம் புழங்க ஆரம்பித்துவிடுவதால், வருமானம் அதிகரித்துவிட்டதாக மாயையான எண்ணம் ஏற்படும். அதனால் விலைவாசி எகிறினாலும், கவலையே இன்றி எந்த விலையாக இருந்தாலும் பணம் கொடுத்து வாங்குகிற மனப்பக்குவம் வந்துவிடும். அதே சமயம் மானியமாக நமது வங்கிக்கு வருகிற பணத்தை நாம் நமது தேவைக்கு பயன்படுத்தாமல் வீண் செலவு செய்யும் வாய்ப்புதான் அதிகம். இந்தப் பணத்தை கவர்வதற்காகவே டாஸ்மாக்குகளும், ஷாப்பிங் மால்களும் காத்திருக்கின்றன. எனவே வங்கி வழியாக நேரடியாக பணம் வந்தாலும், பணம் மீண்டும் அரசாங்கத்துக்கும், தனியார் வியாபாரிகளுக்கும் சென்றுவிடும்.

Wednesday, December 26, 2012
மானியமா? பிச்சையா? ( இது சிந்திக்கலாம் தளத்தின் பதிவு)
மக்களுக்கு நேரடி மானியம் என்ற அறிவிப்பை மத்திய அரசு அறிவித்திருப்பது யாரை செழிமைபடுத்துவதற்கு என்று தெரியவில்லை. அடித் தட்டு மக்களை வளப்படுத்தவா இல்லை அரசிடம் பணம் கொழுத்திருப்பதை காட்டவா? மானியம் கொடுப்பதனால் இந்தியாவில் உள்ள வறுமை அடியோடு ஒழிந்து விடுமா? போன்ற பல கேள்விகள் பலரது தலையை சுற்றி வட்டமடித்துக் கொண்டிருக்கிறது.
|
|
ஒரே முகவரியில் இரு ரேஷன் கார்டு : "தத்கல்' முறையில் வழங்க திட்டம்
ஒரே முகவரியில், ஒரே வீட்டில் வசிக்கும் குடும்பத்தினர், இரண்டு ரேஷன் கார்டுகள் பெற விரும்பினால், ஒரு கார்டுக்கு பொருட்கள் இல்லா, முகவரி கார்டினை, "தத்கல்' முறையில் வழங்கும் திட்டம், தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில், 2 கோடிக்கும் மேல், ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. இவற்றில், 1.97 கோடி கார்டுகளுக்கு, அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த, 2005ல் அளிக்கப்பட்ட ரேஷன் கார்டு, 2009ல் முடிந்த நிலையில், இணைப்புத் தாள் வழங்கப்பட்டது. ரேஷன் தாள் இணைப்புக்கு பதிலாக, "ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்கு காலதாமதம் ஆகும் என்பதால், ரேஷன் கார்டுகளில், இந்தாண்டிற்கும் இணைப்புத்தாளை சேர்க்கும் பணிகள் துவங்க உள்ளன. போலி கார்டுகளை தடுக்கவும், இருக்கும் கார்டுகளை முறைப்படுத்தவும், ஒரே முகவரியில் இருக்கும் ரேஷன் கார்டை, பொருட்களுக்காகவும், காஸ் சிலிண்டர் பெறவும், இரண்டாக பிரிக்கப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் மானிய விலையில் சிலிண்டர் தருவதில் மத்திய அரசு எடுத்த முடிவைத் தொடர்ந்து, சிலிண்டர் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன. இதை கருத்தில் கொண்டு, ஒரே முகவரியில் இருக்கும் கார்டை, இரண்டாக பிரிப்பதில் இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஒரே முகவரியில், ஒரே வீட்டில் வாழும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களில், திருமணமான மகனோ, மகளோ பிரிந்து அதே வீட்டில், மற்றொரு பகுதியில் வசித்தால், அவர்களுக்கு அதே முகவரியில், மற்றொரு கார்டு தரப்படும். அந்த கார்டு,வெறும் முகவரி கார்டாக மட்டுமே இருக்கும்; பொருட்கள் வாங்க முடியாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அந்த கார்டை, "தத்கல்' முறையில், 100 ரூபாய் செலுத்தி, அந்தந்த பகுதி வட்டார வழங்கல் அலுவலகங்களில், ஒரே மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
|
|
Thursday, December 20, 2012
சொட்டுமருந்தும், தடுப்பூசியும் மறைக்கப்பட்ட அதிர்ச்சி உண்மைகள்
நம் வீட்டில் ஒரு குழந்தை பிறந்துவிட்டால் போதும் ஒரு பெரிய அட்டவணை வைத்துக்கொண்டு அதற்கு இதற்க்கு என்று ஆயிரத்தெட்டு தடுப்பூசிகள் போடுகிறோம் ,போதாத குறைக்கு இடை இடையே சொட்டுமருந்துகள் வேறு கொடுக்கிறோம். இதெல்லாம் ஏன் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் என்றாவது சிந்தித்ததுண்டா ? எல்லாம் குழந்தைகளின் நல்லதுக்கு தானே அவர்களை உயிர்கொல்லி நோயிலிருந்து பாதுகாக்க தான் என்று நாம் நினைத்தால் நம்மை விட ஏமாளிகள் வேறு யாரும் இருக்க முடியாது.
உலகத்தில் உள்ள உயிர்கொல்லி நோய்கள் அனைத்திற்கும் சேர்த்து நம் குழந்தைக்கு தடுப்பூசி போட்டாச்சு ஆனாலும் மாதம் மாதம் மருத்துவமனைகளுக்கு ஜுரம், வைரஸ் ஜுரம் ,வாந்தி,பேதி, மலேரியா என்று பிள்ளைகளை கூட்டிகொண்டு நடையா நடக்கிறீர்களே உயிர்கொல்லி நோயை எதிர்க்கும் அளவிற்கு தயார்படுத்தபட்ட உங்கள் குழந்தையின் உடம்பினால் ஜுஜுபி ஜுரத்தை கட்டுப்படுத்த முடியவில்லையே ஏன் ? என்று என்றாவது யோசித்ததுண்டா ...?

Wednesday, December 19, 2012
தகவல் உரிமை சட்டம்: பிரதமருக்கு நோட்டீஸ் அனுப்பிய 11 வயது சிறுமி

லக்னோ :"தகவல் பெறும் உரிமை சட்டத்தை, பெரும்பாலானோர் தவறாக பயன்படுத்துகின்றனர் என குற்றம் சாட்டிய பிரதமர், மன்மோகன் சிங், அதற்கான ஆதாரங்களை தர வேண்டும்; இல்லையேல், அவர், சட்ட ரீதியான நடவடிக்கையை சந்திக்க நேரிடும்' என, 11 வயது பள்ளி மாணவி, பிரதமருக்கு, நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
"காங்கிரஸ் தலைவர் சோனியா, அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று, மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட விதத்தில், மத்திய அரசு அல்லது காங்கிரஸ் கட்சிக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது' என, தகவல்கள் வெளியாகின."அந்த தகவல் உண்மை தானா? சோனியாவின் மருத்துவ சிகிச்சைக்காக, செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு?' என, தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள், கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு, காங்கிரஸ் மற்றும் மத்திய அரசு வட்டாரங்களில், கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தனிப்பட்ட மனிதர்களின் மருத்துவ செலவு பற்றி தகவல் கேட்பதா என, காங்கிரஸ் தலைவர்கள் எதிர்த்தனர்.

Monday, December 17, 2012
Saturday, December 15, 2012
ஐசிஐசிஐ வங்கியின் புதிய இலவச ஆன்லைன் வங்கி கணக்கு
இந்தியாவின் பிரபல வங்கியான ஐசிஐசிஐ தற்பொழுது புதிய இலவச ஆன்லைன் வங்கி கணக்கு சேவையை துவங்கி உள்ளது. இதற்கு B2 Digital Banking என்று பெயர் வைத்துள்ளனர். இந்த ஆன்லைன் வங்கி கணக்கின் மூலம் ஆன்லைனில் பணம் பரிமாற்றம் செய்வது மட்டுமின்றி மின்சாரம், தொலைபேசி போன்றவைகளுக்காண பில் தொகையும் செலுத்த முடியும். மற்றும் இந்த சேமிப்பு கணக்கில் நீங்கள் வைத்திருக்கும் தொகைக்கு வருடத்திற்கு 3.5% என்ற வட்டி விகிதத்தில் கூடுதல் பணமும் கிடைக்கும்.
|
|
Tuesday, December 11, 2012
Monday, December 10, 2012
ஆதார் அட்டை கை மேல காசு! ஞாநி
கை மேல காசு!
இதை உடனடியாக இந்தியாவில் 51 மாவட்டங்களில் செயல்படுத்த்ப் போகிறது. பின்னர் படிப்படியாக செய்வதே திட்டம். இதில் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், புதிய ‘கை மேல காசு’ திட்டத்தின் கீழ் யார் யாருக்கு மான்யம் தரப்படவேண்டும் என்பதை தீர்மானிக்கப்போவது ஆதார் அடையாள அட்டைதான்.
மத்திய அரசின் புதிய ரொக்க மான்ய திட்டத்தின்படி இனி இந்தியர்கள் எல்லாருடைய ரேஷன் அட்டைகளையும் குப்பைத் தொட்டியில் எறியவேண்டியதுதான். அல்லது வருகிற பொங்கல் சமயத்தில் போகியன்று தீக்கிரையாக்கி குளிர் காயலாம்.
அரசு மான்ய விலையில் மக்களுக்கு அளித்து வரும் எல்லா பொருட்களையும் இனி மக்கள் தனியாரிடம்தான் வாங்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தும் விதத்தில், விலை குறைத்தோ விலை இல்லாமலோ தரப்பட்ட பொருட்களுக்கான அரசு மான்யம் இனிமேல் ரொக்கப் பணமாகவே மக்களுக்குத் தரப்படும் என்றும் மன்மோகன் அரசு அறிவித்திருக்கிறது.
இதை உடனடியாக இந்தியாவில் 51 மாவட்டங்களில் செயல்படுத்த்ப் போகிறது. பின்னர் படிப்படியாக செய்வதே திட்டம். இதில் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், புதிய ‘கை மேல காசு’ திட்டத்தின் கீழ் யார் யாருக்கு மான்யம் தரப்படவேண்டும் என்பதை தீர்மானிக்கப்போவது ஆதார் அடையாள அட்டைதான்.
ஏன் இந்த திட்டம் ? இதுவரை அரசு மக்களுக்கு மான்ய விலையில் தரும் பல பொருட்கள் தகுதியானவர்களுக்கு மட்டும் போகாமல், வசதியானவர்களுக்கும் போவதை தடுப்பது ஒரு நோக்கம். இந்த நோக்கம் என்னவோ நல்ல நோக்கம்தான். வெள்ள நிவாரண உதவியையும் ம் இலவச டி.வி.பெட்டியையும் கூச்சமே இல்லாமல் காரில் போய் வாங்கிக் கொண்டு வரக்கூடிய ‘ஏழைகள்’இருக்கும் தேசம்தானே இது. ரேஷன் அட்டைகளிலும் பல போலிகள் உலவுவதும் நிஜம்தான்.
|
|
விஸ்வரூபம் DTH முயற்சி கமலின் அறிக்கை
கமலில் குரலில் இந்த அறிக்கையை கேட்க இங்கேhttp://www.youtube.com/ watch?v=6u-UKmazTxI கிளிக் செயுங்கள்.
விஸ்வரூபம் படத்தை டிடிஎச்சில் வெளியிடுவதை எதிர்ப்போரை க

ண்டித்தும், விஸ்வரூபம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்று கிளப்பி விடப்பட்டுள்ள புரளிகளுக்கு பதில் அளிக்கும் விதமாக கமல்ஹாசன் பெரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை இதோ.....
புதிய முயற்சிகளை, கண்டுபிடிப்புகளை முதலில் உதாசீனம் செய்வதும் ஏளனம் செய்வதும் ஏன்…அவைகளைக் கண்டனம் செய்வதும் கூட உலக வழக்கம்.
உலகம் உருண்டை வடிவம் என்று சொன்ன விஞ்ஞானி கலீலியோவை எரித்துக் கொல்ல வேண்டும் என்று சொன்ன இஸ்பானிய ராணி முதல் இன்றைய சினிமாத் துறையினர் வரை இம்மனப்பாங்கு நீடிக்கிறது.
ராஜ்கமல் நிறுவனத்தின் DTH முயற்சியையும் புரிதல் இல்லாததால் ‘புறக்கணிப்போம், புறந்தள்ளுவோம்’ என்ற பதற்றக்குரல்கள் எழுகின்றன. தேவையற்ற புரளிகளையும் கிளப்புகிறது ஒரு கூட்டம்.
ஆனால் திரைத்துறையில் ஒரு பெரும் கூட்டம் – பெரும்பான்மை – ‘இது சினிமா வர்த்தகத்தின் புதிய பரிணாம வளர்ச்சி; தமிழ் சினிமாவை, ஏன்…உலக சினிமாவையே புதிய வருமான எல்லைகளைக் கடக்கவைக்கும் முயற்சி’ என்று என்னைப் பாராட்டுகிறது.
இது சந்தோஷமான செய்தி. DTHற்கு வெகுவானவரவேற்பு உள்ளது. இது சினிமாவை வலுப்படுத்தும் இன்னொரு வியாபாரக்கிளை.
ஒரு சிறுபான்மை மட்டும் இது நாசம் விளைவிக்கும் என்று ஆவேசம் கொள்கிறது.

Friday, December 07, 2012
55 ஆயிரம் ரூபாயில் வீட்டில் அமைக்கலாம் சிறிய காற்றாலை
வீட்டு உபயோகத்திற்கு ஏற்ப, 55 ஆயிரம் ரூபாயில், செங்குத்தான காற்றாலைகளை நிறுவும் நிறுவனங்கள் சந்தையில் நுழைந்துள்ளன. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில், காற்றாலை மின் உற்பத்திக்கு, முக்கிய பங்கு அளிக்கப்படுகிறது. இதுவரை, வர்த்தக உபயோகத்திற்கு மட்டுமே காற்றாலைகள் அமைக்கப்பட்டன.அதிகரிக்கும் மின்வெட்டை மனதில் கொண்டு, வீட்டு உபயோகத்திற்கான சிறிய காற்றாலைகள் வடிவமைப்பில் நிறுவனங்கள் இறங்கி உள்ளன.வீட்டு உபயோகத்திற்கான காற்றாலைகளை வடிவமைத்தாலும், அவை, நடுத்தர மக்கள் வாங்கும் விலையில் இல்லை என்ற குறை இருந்தது.தற்போது, நடுத்தர மக்களின் மனக்குறையை போக்கும் விதமாக, சந்தையில் சிறிய காற்றாலைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
|
|
Thursday, December 06, 2012
Subscribe to:
Comments (Atom)